பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 209

வடிவம் பற்றிய கொள்கை

தமிழில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா வஞ்சிப்பா என கால்வகைப் பாக்களும், தாழிசை, துறை, விருத்தம் எனப் பாவினங்களும், அவற்றில் சிற்சில வகைகளும், கவிதையின் வடிவங்களாம்.

‘முழுமை உடையதாகவும் ஒருமுகமான இயைபு உடையதாகவும் விளங்குவதே கல்ல வடிவமாகும். கூறத்தக்கன எல்லாம் கூறி முடிந்தன, குறை இல்லை என்ற நிறைவு அளிப்பது முழுமை எனப்படும். கூறிய பகுதிகள் எல்லாம் தொடர்புற்றுச் சிதைவுறாமல் ஒன்றோடொன்று இயைந்து கிற்பதே இயைபு எனப்படும்’ என்ற வடிவத்தை விரித்துரைப்பர் டாக்டர் மு. வ.

பாவும், பாவினமுமாகிய யாப்புகளைப் பொருட் சிறப்பமையப் பாடுவதில் குமரகுருபரர் வல்லவர்.

கலிவெண்பா வடிவில் அமைந்தது கந்தர் கலி வெண்பா. சந்தவிருத்தங்கள் அமையப் பாடப்பட்டவை இவருடைய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் நூல்கள். ஒருபோகு வெண்பா, கலித்துறை, வெண்டுறை, வஞ்சித்துறை, இன்னிசை வெண்பா, ஆசிரியப்பன பலவகை விருத்தங்

களால் கலந்து செய்யப்படுவதுவே கலம்பகம். அவ்வகையில் அமைந்ததுவே குமரகுருபரரின் மதுரை, காசிக் கலம்பகங்கள். கான்மணிமாலை என்பது

வெவ்வாறு வகையாக கான்கு மணிகளைத் தொடுத் தமைந்த மாலைபோல வெண்பா, கட்டளைக் கலித் துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா என்பவை