பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/ /

! / i !

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 221

குறைவிசேட அணி முதலிய அணிகள் அமைய இவர் பாடியுள்ள பாடல்களும், இவர் பிரபந்தங்களில் இடம் பெற்றுள்ளன. s -

s o

உயர் கவிதை /

o

  • அழகோடு கூடியதே,கவிதை. கலையென்பதும் அதுவே அமைக்கும் சொல்லில் ஒர் அழகு, எடுத்தாளும் பொருளில் ஒர் அழகு, கூறும் உவமையில் ஒர் அழகு, மொழியும் கயத்தில் ஒர் அழகு, பொங்கும் உணர்ச்சியில் ஒர் அழகு, ஊக்குவிக்கும் எழுச்சியில் ஒர் அழகு, சிந்திக்கும் தத்துவத்தில் ஒர் அழகு, வழங்கும் தாய் மொழியில் ஒர் அழகு, ஒசைப்பண்பில் ஒர் அழகு, எளிமையில் ஒர் அழகு, இனிமையில் ஒர் அழகு எதுகையில் ஒர் அழகு, மோனையில் ஓர் அழகு, ஒன்பது வகைப்பட்ட சுவைகளின் இப்படி எல்லா வற்றிலும் அழகு மயமாகப் பொலிவதே கவிதை. அழகு எங்கெங்கெல்லாம் குடி கொண்டிருக்கிறதோ அங்கெங்கெல்லாம் கவிதைப்பெண்ணாள் உயிரோவிய மாகக் கொலுவிருப்பாள்,” என்று திறானாய்வாளர் கருதுவர். குமரகுருபரர் படைப்புகளும் அழகு இமை யும் உயிரோவியமாக அமைந்துள்ள பாங்கைப் படிப்பார் நன்கு உணர்வர்.

/ t / அடிக்குறிப்புகள்

1. தொ.மு. சிதம்பர ரகுநாதன், எழுதுவது எப்படி?

பக். 462-463 2. டாக்டர். மு.வ. , எழுதுவது எப்படி? பக். 1 3. தேவர் பிரான் கவிராயரின் சிறப்புப் பாயிரம், பூர்

குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு; பக். 13