பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வாழ்வியல் நெ றிகள்

இப்பாடலில் மருதத்திற்குரிய முதலும் கருவும் வந்து உரிப்பொருளால் சிறப்பெய்தி முடிந்தது. இன்னின்ன திணைக்கு இன்னின்ன கிலம் என்று பாகுபடுத்தும் போது, முதற்பொருள் கிலம், பொழுது என்று இருவகைப்படும் என்பதை,

முதல் எனப்படுவது கிலம் பொழுதிரண்டின் இயல்பென மொழிய இயல்புணர்ங் தோரே

(தொல். அகத் : 4)

என்னும் நூற்பாவில் விளக்குகின்றார். அடுத்து,

மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

(தொல், அகதி 5) என்று,

முல்லைக்குக் காடும் காடு சார்ந்த பகுதியும் குறிஞ்சிக்கு மலையும் மலைசார்ந்த பகுதியும் மருதத்திற்கு வயலும் வயல்சார்ந்த பகுதியும் நெய்தலுக்குக் கடற்கரையும் அது சார்ந்த பகுதியும்

நிலமாகும் என்பதை விளக்கிக் காட்டுகின்றார். இந்நூற்பா உரையில் இளம்பூரணர், இயற்கை என்பதனால் செய்து கோடல் பெறாமை அறிந்து கொள்க’ என்று விளக்கிச் செல்கின்றார். இதனால் கிலமும் பொழுதும் மக்களால் செய்து கொள்ளப் படுவன அல்ல என்பதை விளக்கிச் செல்வதை அறிய முடிகின்றது. இந்நூற்பாவிற்கு உரையெழுதும்