பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 29

இப்பாடலில் நிலவருணனை அமைந்துள்ளது. பாலை போல் மாறியிருந்த நிலம், பாட்டுப்பகுதி மழை பொழிந்து சிறப்புறுவதையும் இப்பாடல்வழி அறிய முடிகின்றது. இப்பாடலில் பாலைக்குரிய உரிப்பொருள் பயின்று வந்தாலும் கிலத்தின் அடிப்படையில் முல்லைத் திணைப் பாடலாகக் கொள்ளப்பட்டுள்ளது.

கருப்பொருளும், முதற்பொருளில் பொழுதும் திணை மயக்கத்தில் மயங்கி வரலாம். அதாவது பாலைத் திணைக்குரியது வேறொரு திணைக்கு வரலாம். ஆனால் கிலமும், உரிப்பொருளும் மயங்கி வராது. அதாவது நிலமும் உரிப்பொருளும் ஒரு பாடலில் பயன்று வந்தால், அவை ஒரே திணைக் குரியனவாயின் அ வ் வா ேற கொள்ளப்படும். அவ்வாறின்றி மேற்காட்டிய பாடலில் உள்ளது போல் பாலைக்குரிய உரிப்பொருளும் முல்லைக்குரிய நிலமும் ஒரு பாடலில் பயின்று வந்தால் கிலத்தின் அடிப்படை யில் பாடலின் திணை உணரப்படும். இதனால் கிலப் பாகுபாட்டிற்கு முதன்மையாயிருந்த தமிழர்கள்தம் திறம் உணர முடிகின்றது.

திணை மயக் குறுதலும் கடிநிலை இலவே நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிய புலன்கன் குணர்ந்த புலமையோரே.

(தொல். அகத் 14)

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே

(தொல். அகத் 15)

என்னும் நூற்பாக்கள் திணை மயக்கத்தில் கிலனும் உருப்பொருளும் மயங்காத நிலையை அறிய முடிகின்றது. சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பாக