பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வாழ்வியல் நெறிகள்

அககானுாற்றுப் பாடல்கள் நிலவருணனையில் சிறந்து கிற்கின்றன.

நிலத்தின் இயல்புகளை விளக்கும் பாடல்கள் தமிழிலக்கியங்களில் காணப்படுகின்றன.

யாயும் ஞாயும் யாரா கியரோ எங்தையும் நுங்தையும் எம்முறைக் கேளிர்

யானும் யுேம் எவ்வழி அறிதுஞ் செம்புலப் பெயனிர் போல அன்புடை நெஞ்சங் தாங்கலங் தனவே

(குறுந்தொகை 40) என்னும் பாடலில் முன்பின் தொடர்பில்லாத தலைவனும் தலைவியும் ஒன்றிணைந்ததை கிலமும் நீரும் சேர்ந்ததற்கு உவமை கூறுகின்றார், செம்புலப் பெயனிரார். நீர் தான்சேரும் கிலத்திற்கேற்ப வண்ணம் மாறும்; இருக்கும் பொருளுக்கேற்ப வடிவம் மாறும். இந்த உண்மையை அனுபவ வாயிலாக உயர்ந்து அறிந்து பாடியுள்ளதை அறிய முடிகின்றது. எனவே மண்ணும் நீரும் கலந்த கலப்பு இங்கு உவமை கூறப் பட்டுள்ளது. மேலும் செம்மண்ணொடு நீர் சேர்ந்து செக்கிறம் பெற்றபின் இரண்டையும் தனித் தனியே பிரித்தறிதல் கடினம். இந்த அடிப்படையையும் உணர்ந்து தலைவனும் தலைவியும் இனிப் பிரிக்க இயலாதவர்கள் என்னும் தத்துவத்தையும் இங்கு உள்ளடக்கிக் கூறியிருத்தல் காணலாம்.

தெய்வப்புலமைத் திருவள்ளுவரும் இக்கருத்தைத் தனது நூலில் விளக்கிச் செல்கின்றார்.

கிலத்தியல்பா னிர்திரிங் தற்றாகு மாந்தர்க் கினத்தியல்ப தாக மறிவ.

த்தி தாகு மறிவு (திருக்குறள் 432)