பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வாழ்வியல் நெறிகள்

இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின் நிலமென்னும் கல்லாள் நகும்

(திருக்குறள் 1040)

என்று கிலத்தின் வள்ளன்மையை விளக்கிச் செல் கின்றார்.

அகழ்வாரைத் தாங்கும் கிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை

岳岛 (திருக்குறள் 1 151)

என்று நிலத்தோடு பொறுமை ஒப்பிட்டுப் பேசப் படுகின்றது. நிலம் பயிர்கள் மூலமும் தன்னுள் புதைந்து கிடக்கின்ற கரிம வளத்தின் மூலமும், நீரின் மூலமும் உலகைப் பாதுகாத்து வருதல் இங்கு நினைவு கூரத்தக்கது. கிலம் மிகவும் பரந்து விரிந்து பெருகி இருப்பதைக் குறுக்தொகை உவமையாக்கியுள்ளது.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தேனிழைக்கும் காடனொடு நட்பே

(குறுந்தொகை 3)

என்னும் பாடல் கிலத்தின் அளவுப் பெருமையை விளக்கி நிற்கின்றது.

நாடா கொன்றா காடா கொன்றா அவலா கொன்றா மிசையா கொன்றா எவ்வழி கல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே *

(புறநானூறு 187)

என்னும் புறகானுாற்றுப் பாடல் அவ்வக் கிலத்தில் வாழும் மக்களால் கிலத்திற்குப் பெருமை என்பதை விளக்குகின்றது.