பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டரி சி. பாலசுப்பிரமணியன் 37

கவினழிந்து கிடந்தன. புயல்கள் முழங்கக் கவின் பெறும் ஆதலின், அதற்கு அது சிறந்ததாம். மாலைப் பொழுது இங்கிலத்திற்கு இன்றியமையாத முல்லை மலரும் காலம் ஆதலாலும், அங்கிலத்துக் கருப்பொரு ளாகிய ஆகிரை வருங்காலமாதலாலும், ஆண்டுத் தனியிருப்பார்க்கு இவை கண்டுழி வருத்தம் மிகுதலின் அதுவும் சிறந்தது ஆயிற்று. குறிஞ்சிக்குப் பெரும் பான்மையும் களவிற் புணர்ச்சி பொருளாதலின் அப்புணர்ச்சிக்குத் தனி இடம் வேண்டுமென்றே, அது கூதிர்காலத்துப் பகலும் இரவும் நுண்துளி சிதறி இயங்குவார் இலராம் ஆதலான் ஆண்டுத் தனிப்படல் எளிதாகலின், அதற்கு அது சிறந்தது. கடுகாள் யாமமும் அவ்வாறாகலின் அதுவும் சிறந்தது. மருதத்திற்கு கிலம் பழனஞ்சார்ந்த இடமாதலான், ஆண்டு உறைவான் மேன்மக்களாதலின் அவர் பரத்தையிற் பிரிவுழி அம்மனையகத்து உறைந்தமை பிறர் அறியாமை மறைத்தல் வேண்டி வைகறைக் கண் தம்மையகத்துப் பெயரும்வழி, ஆண்டு மனைவி, ஊடலுற்றுச் சார்கிலளாமாதலால், அவை அங்கிலத் திற்குச் சிறந்தன. கெய்தற்குப் பெரும்பான்மையும் இரக்கம் பொருளாதலின், தன்மையுற்று இரங்கு வார்க்குப் பகற்பொழுதினும் இராப்பொழுது மிகுமா தலின் அப்பொழுது வருதற்கேதுவாகிய ஏற்பாடு கண்டார். இனி வருவது மாலையென வருத்த முறுதலின், அதற்கு அது சிறந்தது என்க. (தொல். அகத் 12 உரை) விளக்கியுள்ளது இங்குக் குறிக்கத் தக்கதாகும்.

மக்கள் தங்கள் வாழ்க்கையோடு நிலத்தையும் பொழுதையும் தொடர்புபடுத்தி வாழ்ந்தனர். நிலத்தின்