பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-48 H வாழ்வியல் நெறிகை

மீன்பூத் தவிர்வரும் அக்திவான் விசும்பு என்ற பகுதியின் மூலம் விசும்பின் அழகிய காட்சியை விரிக்கின்றார். வானத்தின் விண்மீன்கள் கிறைந்து விளங்குகின்றன. அந்தியிலை கேரம். வானத்தை நோக்கிய புலவர்க்குப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்ற காட்சி தோன்றிவிட்டது போலும். எனவேதான் ‘மீன்பூத்தவிர் வரும் என்ற அழகிய சொல்லாட்சி -யின் மூலம் விண்மீன்களைப் படம் பிடிக்கின்றார்.

இவ்வாறாக முல்லைத்தினைப் பாடல்களில் பல அரிய சொல்லாட்சிகள் அமைந்து காணப்படுகின்றன.

வடிவம்

இலக்கியத்தின் இன்றியமையாத கூறுகளில் வடிவம் ஒன்று. கவிதைக்குரிய வடிவமாக யாப்பு அமைப்ப்ே கருதப்படுகிறது. தொல்காப்பியர் அகப் பாடல் கலிப்பா, பரிபாடல் என்ற இருவகைப் பாக்களால் மட்டுமே அமையும் எனக் கூறுகின்றார். தொல்காப்பியர் கூறும் இலக்கிய வடிவம் முல்லைக் கலியில் மட்டுமே அமைகிறது. அககானுாறு, குறுக்தொகை, கற்றிணை, முல்லைப்பாட்டு இவை கான்கும் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. கார் காற்பது ஒன்று ம ட் டு ம் வெண்பாவில் அமைந்துள்ளது.

வண்டுபடத் ததைங்த கொடியினர் இடையிருபு பொன்செய் புனையுழை கட்டிய மகளிர் கதுப்பிற் தோன்றும் புதுப்பூங் கொன்றை “கானம் காரெனக் கூறினும்

யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே