பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-50 வாழ்வியல் நெறிகள்

பொருமுரண் மேம்பட்ட பொலம்புனை புகழ்நேமித் திருமறு மார்பன்போற் திறல்சான்ற காடு மிக்கொளிர் தாழ்சடை மேவரும் பிறைநுதல் முக்கண்ணான் உருருவ போல் முரண்மிகு குரா அல்.

பண்பாட்டுச் செய்திகளை உவமையாக்கும் போக்கு கார்நாற்பதில் காணப்படுகிறது. சமுதாய ஏற்றத் தாழ்வினைத் துணிந்து உரைக்கும் திறத்தினையும் கார்காற்பதில் காணமுடிகிறது. இயற்கையே உவமை யாக அமைகின்ற பாங்கினை அகாகானுாறு, குறுங் தொகை, முல்லைப்பாட்டு, முல்லைக்கலி இவை சித்திரிக்கின்றன. கற்றிணையில் கருத்து வெளிப் பாட்டிற்கு உள்ளுறையும் ஒரு உத்தியாகக் கையாளப் படுகிறது. மெய்ப்பாடுகளை வெளிப்படுத்துகின்ற .கிலையிலும் உவமை அமைகிறது. வருணனைத் திறத்தை வெளிப்படுத்த புலவர்கள் அடைகளைப் பயன்படுத்துகின்றனர்.

-கற்பனை வளம்

கவிதையின் கூறுகளுள் இன்றியமையாதன வாகத் துலங்குவனவற்றுள் கற்பனையும் ஒன்று. கவிஞன் கண்ட உலகினைச் சுவைஞன் காண வாயிலாக அமைவது கற்பனை. இக்கற்பனை உள்ளதை உள்ளவாறே படைத்துக் காட்டும் கிலை, உள்ளதை உணர்ந்தவாறு படைத்துக் காட்டும் கிலை STGTOT இருநிலைகளில் அமைகின்றது. இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொண்ட முல்லைத்தினைப் பாடல்களில் இரண்டு நிலையும் காணப்படுகிறது.

முல்லைப்பாட்டில் கார்கால மழையினால் காட்டு வழி சிறப்புற்ற நிலையைக் காட்ட வரும் கப்பூதனார்