பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

‘வாழ்வியல் நெறிகள் எனும் தலைப்பில் அமைந்துள்ள இவ்விலக்கிய நூல், பன்னிரண்டு கட்டுரைகளைப் பாங்கிாகக் கொண்டுள்ளது. தமிழ்க்குடி, குறிக்கோள் பலவற்றைக் கொண்ட குடி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்க்கை வளமும், இலக்கியச் செறிவும் கொண்ட தமிழ்ர்கள், எடுத்துக்காட்டான குறிக்கோள் நெறியினைக் கொண்டு குவலயம் புகழ வாழ்ந்தார்கள்.

அவன்கொண்ட குடுமித்து இத்தண்பணை காடே” என்னும் தொடரும் நினைக்கத் தக்கதாகும்.

பழந்தமிழர்களின் குறிக்கோள் நெறியினை முதல் கட்டுரை முழங்கிக் காட்டுகின்றது. நானிலம் என்று தாம் வாழும் நிலத்தை அழைத்தவர் தமிழர். பாலை’ எனும் ஒரு நிலத்தைச் சேர்த்து ஐவகை நில்ங்களாகக் கொண்டு, ஆந்த ஐவகை நிலத்திற்கும் பெரும் பொழுதுகள் ஆறனையும் சிறுபொழுதுகள் ஆறனையும் பொருத்திக் கொண்டு புகழ் மிக்க இலக்கிய இன்பத்தினைத் துய்த்த பழங்குடிகளாகத் தமிழர்கள் திகழ்கின்றனர். அதனை எடுத்து மொழிவது இரண்டாம் கட்டுரை. முல்லைத்திண்ைப் பாடல்களில் கவிநயம்’ என்னும் மூன்றாவது கட்டுரை, கற்பு நெறி கவினுறத்_துலங்கிய முல்லை நில ஒழுக்கத்தை முறையாகச் சொல்லுகின்றது. நான்காவது கட்டுரை முல்லைப் பாட்டினை ஒரு திறனாய்வுக் கண்கொண்டு கானும் போக்கில் அமைந்துள்ளது. முல்லை எனும் அகத்திணைக்குப் புறனாக அமையும் வஞ்சி எனும் புறத்திணை ஒழுக்கத்தினை இக்கட்டுரை புலப்படுத்துகின்றது.

பிள்ளைத்தமிழ் எனும் பெரிய தமிழ், தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித் சிறப்பு வாய்ந்ததாகும். பிள்ளைத்தமிழ் இலக்கணம் கண்ட தமிழ் அறிஞர்கள், பிள்ளைத்தமிழ் இலக்கியத்தினைப் படைத்துப் பெருமை சேர்த்துள்ளனர். பிள்ளைத் தமிழ் இலக்கியச் சிறப்பின்ை இக்கட்டுரை எடுத்து இயம்புகின்றது. திருமூலர் தெளிவுறுத்தும் வாழ்க்கை நெறி எனும் ஆறாவது கட்டுரை, உலகில் என்றும் நின்லத்திருக்கும் நிலையாமையினை நயம்படக் கிளத்துகின்றது. :தமிழ் இலக்கியத்தில் இராதை’ எனும் ஏழாவ்து கட்டுரை ஆழ்ந்த ஆய்வுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ‘ஒட்டக்கூத்தரும் தக்கயாகப் பரணியும்’ எனும் எட்டாவது