பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o வாழ்வியல் நெறிகள்

கற்பனை வகைகள்

கற்பனையின் வகைகளுள் குறிப்பிடத் தக்கனவாக அமைவன படைப்புக் கற்பனை, இயைபுக் கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை என்பன. முல்லைத் திணைப் பாடல்களில் இம்மூன்று: கற்பனைகளும் விளங்குமாற்றை இனிக் காண்போம்.

படைப்புக் கற்பனை

கவிஞன் ஒருவன் தன்னுடைய அனுபவத்தில் கண்ட பண்புகளை எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் தானே தேர்ந்தெடுத்து அவற்றை ஒன்றாக இணைத்துப் படைத்துக் காட்டுந் திறனே படைப்புக்கற்பனையாகும். பொதுவாக இப்படைப்புக் கற்பனையை எல்லா இலக்கியங்களிலும் காண முடிகிறது.

கல்லோங்கு கானம் களிற்றின் மதம் காறு கின்றது. இமிழிசை வானம் முழங்குகின்றது. விரி திரை வெள்ளம் வெறுப்பப் பருகி பெருவிறல் வானம் பெருவரை சேருகின்றது. இந்த நிலையில் தோன்றிப் பூக்கள் மலர்கின்றன. அவை மலர்ந்த காட்சியை, நலமிகு கார்த்திகை காட்டவ ரிட்ட தலைநாள் விளக்கின் தகையுடைய வாகிப் புலமெலாம் பூத்தன தோன்றி

என்று கூறுகின்றார். இங்கு தோன்றிப் பூக்கள் மலர்ந்தமைக்குக் கார்த்திகை தீபத்தை உவமித் துரைப்பது ஆசிரியரின் படைப்புக் கற்பனைக்குத் தக்கதோர் சான்றாகும். இதே தோன்றிப் பூ ஆசிரியர் கப்பூதனார்க்குக் குருதி போல் தோன்றுகிறது.