பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . * . - # * டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் $3

தோடார் தோன்றி குருதி பூப்ப

என்பது கப்பூதனாரின் கற்பனை.

==

ஒக்கூர் மாசாத்தியார் காட்டு வழியாக கடக்து செல்கின்றார். அங்கு அவர் பைம்பயிர் கிரம்பிய புறவினைக் காண்கின்றார். உடனே அவருக்குத் தாம் முன்பு எங்கோ கண்ட கிள்ளையின் இளங் குஞ்சினது துரவி நினைவிற்கு வருகின்றது. இரண்டையும் இணைத்துப் புதியதொரு கற்பனை யைப் படைத்துக் காட்டுகின்றார்.

தளரியற் கிள்ளை இனிதின் எடுத்த வளராப் பிள்ளைத் து வியன்ன வார்பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவு

என்பது அப்பகுதி.

கான வாரளித்தின் தோற்றம் கற்றினை ஆசிரியர்க்கு கறுகெய்யில் பால் விதிர்த்தாற் போன்று தோற்றமளிக்கின்றமையை,

உருக்குறு நறுநெய் பால்விதிர்த்தன்ன அரிக்குரல் மிடற்ற அந்நுண் பல்பொறிக் காமரு தகைய கானவாரணம்

என்ற கற்றிணைப் பகுதியால் தெளியலாம்.

முல்லைக்கலியில் புள்ளிகளையுடைய காளை யைக் காண்கின்றார் ஆசிரியர். உடனே அவருக்கு விண் மீன்களை உடைய வானம் கண்முன் காட்சியளிக்கின்றது. இரண்டையும் இணைத்துப் பார்க்கின்றார். உடனே,

urr۰-4ه