பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 35

முல்லைப்பாட்டு ஆ சி ரி ய ர் கப்பூதனார்க்குக் கொண் பூவின் வண்ணம் திருமாலின் வண்ணமாகக் காட்சி அளிக்கின்றது.

நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப் பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி.

கார் காற்பதில் வானவில்லின் தோற்றம் திருமால் மார்பில் புனையப்பட்ட தாராகக் கற்பனை செய்யப்

படுகிறது.

பொருகடல் வண்ணன் புனைமார்பில் தார்போல் திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ.

கருத்து விளக்கக் கற்பனை

இயற்கையாக கடக்கும். ஒன்றினிடத்துப் புலவர் தாம் கினைத்த கருத்து ஒன்றை ஏற்றி வைத்துக் கற்பனை செய்து பாடுவது கருத்து விளக்கக் கற்பனை யாகும். காடுகள் வாடியிருத்தலும், பின்னர் கார் காலத்தில் மலர்ந்து கிற்றலும் இயற்கையாக கிகழ் கின்ற ஒன்று. காடுகள் வாடியிருத்தலை கல்கூர்ந்தார் மேனி வாடியிருத்தலுக்கும், மலர்ந்து கிற்றலைச் செல்வர் உள்ளத்திற்கும் இணைத்துக் கற்பனை செய் கின்றார் கார் காற்பது ஆசிரியர் .

செல்வர் மனம்போற் கவினின்ற கல்கூர்ந்தார் மேனிபோற் புல்லென்ற காடு.