பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வாழ்வியல் நெறிகள்

அளவுற அமைந்து முல்லைப் பாட்டின் இலக்கிய அழகை-கவிதைச் சுவையை மிகுதிப்படுத்துகின்றன. நூற்று மூன்று அடிகள் கொண்டு மிகச் சிறிய அளவில் இப்பாட்டு அமைந்து இருந்தாலும் முல்லைத் திணையின் முழு அழகினை முல்லைப் பாட்டு விளக்கி கிற்கின்றது. மு. ல் ைல ப் பாட்டின் தொடக்கமே,

கனக்தலை உலகம்”

என்று தொடங்குகின்றது.

முகில்கள் சூல்கொண்டு கருநிறம் பெற்றுக் கடலுக்குள் சென்று நீரை முகந்து வலப்பக்கமாகச் சுழித்து எழுந்து வான் முகட்டுக்குச் செல்லும் பொழுது மலையால் தடுக்கப்பட்டு மழையாகப் பொழிகின்றன. அந்தக் காட்சி, மாவலிச் சக்கரவர்த்தி வாமனனாக வந்த திருமாலின் திருக்கையில் அர்க்கிய கீரினைத் தாரை வார்த்துத் தர பேருருக் கொண்டு பிறங்கிய காட்சியினை ஒத்து இருந்தது என்று மதுரைப் பொன்வாணிகன்ார் மகனார் கப்பூதனார் குறிப் பிட்டுள்ளார். மேலும் முல்லைத்திணையின் தெய்வத் தைத்தொடக்கத்தில் குறிப்பிட்ட கப்பூதனார் முல்லைத் திணை ஒழுக்கத்தை மேற்கொண்டிருக்கும் ஆய மகளிர் வாழ்க்கையினைத் தெள்ளிதின் புலப்படுத்தி யிருக்கக் காணலாம்.

காலையில் மேய்ச்சல் புலத்திற்குப் பசு மந்தைகள் சென்றிருக்க, தம் தாயாரின் பிரிவாலும் தாய்ப்பால் உண்ணாமையினாலும் கலங்கி கிற்கும் கன்றுகள் வருத்தம் நீங்கும் பொருட்டு, ஆயமகள் குளிரால் கடுங்கித் தன் இருகைகளையும் தோள்களைத் தொடும் வண்ணம் குறுக்காக வைத்துக் கொண்டு,