பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரை, ஒட்டக்கூத்தர் கவிதையின் பெருமையினையும்: பரணி நூல்களுள் தக்கயாகப் பரணி தனி இடம் பெற்றுத் திகழ்வதனையும் தெளிவுறுத்தி நிற்கின்றது.

- சைவத்தின் மையம்’ எனும் ஒன்பதாவது கட்டுரை தொன்றுதொட்டுச் சைவ சமயம் தனி ஒளிவீசித் திகழ்வ தனைப் பல்வேறு சான்றுகளுடன் புலப்படுத்திக் காட்டு கின்றது.

‘தமிழில் பக்திப் பனுவல்கள்’ என்னும் பத்தாவது கட்டுரை குமரகுருபரர், சிவப்பிரகாசர், தாயுமானவர், இராமலிங்கர், இக்காலத் தமிழ்க் கவிஞர்கள் ஆகியோர் பக்தித் துறையில் காட்டிய ஈடுப்ாட்டின் காரணமாக் எழுந்த நூல்கள் பற்றிய கருத்துகளைப் புலப்படுத்தி நிற்கின்றது.

‘குமரகுருபரர் வாழ்வும் தொண்டும்’ எனும் கட்டுரை யும் குமரகுருபரர் உணர்த்தும் இலக்கியக் கொள்கை’ எனும் பதினோராவது பன்னிரண்டாவது கட்டுரையும் குமர குருபரரின் சமயப் பெருவாழ்வினையும் தமிழ்ப் புலமையினை யும் - இலக்கியச் செவ்வியினையும் ஒருங்கே புலப்படுத்தி நிற்கின்றன.

இவ்வாறு பல்வேறு கருத்துகளைப் பாங்குறப் புலப் படுத்தி நிற்கும் இவ் வாழ்வியல் நெறிகள்’ எனும் நூல், தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு நல்விருந்தாய் அம்ையும் என்று நம்புகின்றேன்.

— ё1. шп

பொருளடக்கம் * *

கட்டுரை எண் - பக்கங்கள் 1. வாழ்வியல் நெறிகள் o H. H. H. 9

2. தமிழில் நிலமும் பொழுதும் ... 22

3. முல்லைத்தினைப் பாடல்களில் கவிநயம் i H = 39

4. முல்லைப்பாட்டு-ஒரு திறனாய்வு நோக்கு ... 62

5. பிள்ளைத் தமிழ் இலக்கண்மும் இலக்கியமும் ... 79

6. திருமூலர் தெளிவுறுத்தும் வாழ்க்கை நெறி ... 94

7. தமிழ் இலக்கியத்தில் இராதை ... 106

8. ஒட்டக்கூத்தரும் தக்கயாகப் பரணியும் ... 119

9. சைவத்தின் மையம் ... 13 I

10. தமிழில் பக்திப் பனுவல்கள் ... 148 11. குமரகுருபரர் வாழ்வும் தொண்டும் ... 176 12. குமரகுருபரர் உணர்த்தும் இலக்கியக் கொள்கை... 191