பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டரி சி. பாலசுப்பிரமணியன் 63

இத்தொல்காப்பிய நூற்பாக்கள் ஏழனுள் ‘வஞ்சி தானே முல்லையது புறனே” என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாக முல்லைப் பாட்டு அமைந்த திறத்தைக் காண்போம்.

முல்லையும் வஞ்சியும்

முல்லை என்ற அக ஒழுக்கத்திற்கு இயைந்த புற ஒழுக்கமாக வஞ்சி ஒழுக்கம் திகழ்கிறது. வஞ்சி எனப் பட்டதற்குக் காரணம் கூற வரும் இளம்பூரணர் ‘காடுறை உலகமாகிய முல்லைப் புறம் மண் கசை வேட்கையால் எடுத்துச் செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான் அவ்விருபெரு வேக் தரும் வினையாகிய செலவு புரிதலின் அதுவஞ்சி என குறிபெற்றது’ எனக் கூறுகின்றார். இவற்றின் இயைபு பற்றிக் குறிக்கின்ற நிலையில், மாயோன் காடுறை உலகமும் கார்காலமும், முல்லைக்கு முதற்பொரு ளாதலானும் பகைவயிற் சேறவாய வஞ்சிக்கு கிழலும் நீருமுள்ள காலம் வேண்டுமாதலானும், பருமரக் காடாகிய மலை சார்ந்த இடம் அகாமையானும் அதற்கு இது சிறந்ததென்க’ எனக் குறிக்கின்றார்.”

தலைவி தலைவனைப் பிரிந்து காட்டின் கடுவே அமைந்த தன் மலைக்கண் இருப்பது போலத் தலை வனும் தலைவியைப் பிரிந்து பகைவர் காட்டிற்கு அரணான காட்டின்கண் அமைந்த மாடி வீட்டில் தங்கி இருப்பான். ஆதலால் முல்லையும் வஞ்சியும் தம்முன் இயைந்து காணப்படுகின்றது. இனி முல்லைப் பாட்டில் வஞ்சித் திணை ஒழுக்கம் இயைந்து நிற்றலைக் காண்போம். -