பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வாழ்வியல் நெறிகன்

முல்லையில் வஞ்சி

‘வஞ்சிதானே முல்லையது புறனே” என்ற தொல் காப்பிய நூற்பாவிற்கு ஏற்றபடி முல்லை என்னும் அகத்திணைக்கு இயைந்த புறத்திணை ஒழுக்கமான வஞ்சி முல்லைப்பாட்ட்டின் இடையில் அமைவுறப் பொருந்தி வருகிறது. தலைவியின் இருப்பினையும், கார்காலத்தில் வருவதாகக் கூறிச் சென்ற தலை மகனின் தேர் காணாமல் வருந்துகின்ற பிரிவுத் துயரினையும், திறம்படக் கூறி, தலைமகன் தங்கி யிருக்கும் பாசறையின் அமைப்பினையும் அங்க ாகிகழும் .ெ ச ய ல் க ைள யு ம் பொருத்தமுற விளக்குகின்றார் கப்பூதனார். முதல் 28 அடிகளில் முல்லைத்தினை ஒழுக்கத்தினையும், 24-வது அடி முதல் 80 வரை உள்ள அடிகளில் வஞ்சித்தினை ஒழுக்கத்தையும், மீண்டும் 80 முதல் 103 வரை உள்ள அடிகளில் தலைமகள் இல்லிருத்தலையும், கார்காலச் சிறப்பையும், தலைமகன் திரும்பி வருகின்ற செய்தி யையும் அமைக்கின்றார் ஆசிரியர் கப்பூதனார்.

நினைந்து அவள் புலம்பல்

“வினையையே உயிராகக் கொண்ட தலைமகன், 10 கருங்கடல் மேய்ந்த கமஞ்சூல் எழிலி இருங்கல் இறுவிரை ஏறி யுயிர்க்கும் பெரும்பதக் காலையில் திரும்பி வருவதாகக் கூறிச் செல்கின்றான். அவன் கூற்றில் கம்பிக்கை வைத்து அவளும் அவன் பிரிவை ஆற்றியிருக்கின்றாள். இமிழிசை வானம் முழங்கு கின்றது. கல்லோங்கு கானம் களிற்றின் மதம் நாறுகிறது. முல்லை மலர்கள் செவ்வியுடையனவா