பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 69

மன்னன் இருக்கை

இவ்வரண்களுக்கு நடுவே மன்னனின் தனி இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. வில்லரண்களின் மதில் திரையை வளைத்து அரசனுக்கென்று தனிக் கோயில் சமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் உள் பகுதியில் குறுக்தொடி முன்கைக் கூந்தல் சிறுபுறத்து மங்கையர் கச்சிலே வாளைப் பூண்டவராம் நெய்யினை உ.மிழ்கின்றதிரிக்குழாயினால் பாவையினைக் கையிலே அமைந்த விளக்கின் சுடர் குறையுக்தொறும் திரியைக் கொளுத்தி எரிக்கின்றனர்.

......... காப்பண் வேறோர் நெடுங்காழ்க் கண்டம் கோலி யகநேர்பு குறுக்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத்து இரவுபகற் செய்யும் திண்பிடி யொள் வாள் விரவுவிரிக் கச்சிற் பூண்ட மங்கையர் நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளி இக் கையமை விளக்கம் கந்துதொறுமாட்ட.17

மெய்க்காப்பாளர்

இவ்வாறு பாசறையின்கண் மகளிர் இருந்தமையை உணர்த்தியவர் அடுத்து மன்னன் மெய்க்காப்பாளர் சூழ இருக்தமையை அடுத்துப் புலப்படுத்துகின்றார். யானை, குதிரை முதலியன உறங்கலின் அவற்றின் கழுத்தில் கட்டப்பட்டது மணியோசை அடங்கிய நடுயாமத்தில் புனலிபூத்த அசைகின்ற சிறுதுாறுகள் துவலையோடு வருகின்ற காற்றிற்கு அசைந்ததைப் போன்று துகில் முடித்துப் போர்த்த து.ாங்கல் ஓங்குகடைப் பெருமூதாளர் காவலாகச் சுற்றி நிற்கின் றனர் என்பதை,

வா.-5