பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பிள்ளைத்தமிழ் இலக்கணமும் இலக்கியமும்

தோற்றுவாய்

தமிழிலக்கியப் பூங்காவில் பிற்காலத்தில் பூத்துக் குலுங்கித் தழைத்த சிற்றிலக்கியச் செல்வத்துள் பிள்ளைத்தமிழ் என்பதும் ஒன்று. இனிமையாலும் கடை கயத்தாலும் உள்ளத்தைக் கொள்ளும் இத்தமிழ்ச் சிற்றிலக்கியத்தைப் பிள்ளைத்தமிழ் என்றனர் முன்னோர். பிள்ளைக் கவி’ பிள்ளைப்பாட்டு எனவும் இயம்பப் பெறும். பாட்டுடைத் தலைவியையோ, தலைவரையோ குழந்தையாகப் பாவித்து, காப்பு முதலிய பத்து பருவங்கட்குரிய செயல்களைச் சிறப்பித்துக் கூறுவதாகப் புலவர் பெருமக்களால் பாடப்படுவது. கடவுள், ஆசிரியர், வள்ளல், தொண்டர், தலைவர் புலவர்களையோ வைத்துப் பாடுதல் வழக்கு. பிறவா யாக்கையன் ஆதலின் சிவன்மீது பிள்ளைத்தமிழ் பாடுவதில்லை. விநாயகர், முருகன், உமாதேவி மேல் பிள்ளைத்தமிழ் உண்டு. அனுமார் மீதும் பிள்ளைத்தமிழ் உண்டு. ஆசிரியரைப் பற்றியது. அம்பலவாணர் பிள்ளைத்தமிழ் சிவத் தெழுந்த பல்லவராயன் பிள்ளைத் தமிழ் வள்ளல் பற்றியது. புலவர் பற்றியது சேக்கிழார் பிள்ளை.இ