பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வாழ்வியல் நெறிகள்

தமிழ். இராஜாஜியின் பிள்ளைத்தமிழ் தலைவர் பற்றியது. பொதுவாகப் பிள்ளைத்தமிழ் இலக்கியம் ஆண்பால் பிள்ளைத் தமிழ் என்றும், பெண்பால் பிள்ளைத்தமிழ் என்றும் இருவகைப்படும். இனிமையும் எழிலும் தழைத்து இலங்கும் இச்சிற்றிலக்கியம் இன்று 105 எனும் எண் அளவை எட்டி வளர்ந்துள்ளது.

பிள்ளைத்தமிழ் வளர்ச்சி

கம் பழம்பெரும் இலக்கியமான ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியத்திலேயே பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கான வி த் து இடப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பொருளதிகாரப் புறத்திணை இயலில் பாடாண்பாட்டினை உணர்த்துகின்ற பொழுது,

குழவி மருங்கினும் கிழவதாகும்

என்றொரு சூத்திரம் யாத்துள்ளார். இது குழவிப் பருவத்தும் காமப்பகுதி இடம் பெறும் என்பதை உணர்த்தி நிற்கின்றது. காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வரவு, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை எனப் பிள்ளைத்தமிழில் நாம் கானுகின்ற பருவங்கள் பத்தினையும் முறைபடுத்தி உரைத்து உள்ளார் கச்சினார்க்கினியர். -

இளமைந்தர் கலம்வேட்ட வளமங்கையர் வகையுரைத்தன்று என வரும் புறப்பொருள் வெண்பாமாலைப் பகுதியும் இப்பிள்ளைத்தமிழ் இலக்கணத்தைக் கூறுவதே ஆகும்.

தொல்காப்பியத்தை அடுத்து ஆழ்வார்களின் பக்தி இலக்கியங்களில் மிகுதியான இடங்களில் இப்பிள்ளைத்