பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வாழ்வியல் நெறிகள்

குலோத்துங்கன்மீது பிள்ளைத்தமிழ் ஒன்றைப் பாடிப் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தைத் தோற்றுவித்தார். ஒட்டக்கூத்தர் தோற்றுவித்த பிள்ளைத்தமிழ் என்னும் வண்ணமலர் பிற்காலத்தில் அருணாசலக் கவிராயர், சிவஞான முனிவர், வீரராகவ முதலியார், கச்சியப்ப முனிவர், துறைமங்கலம் சிவப்பிரகாசர், சிதம்பர சுவாமிகள், பகழிக்கூத்தர் போன்ற அறிஞர் பெரு மக்களால் மேலும் அழகும் அமைப்பும் பெற்று கி. பி. 2ம் நூற்றாண்டிலும் திக்கெங்கும் மனம் பரப்பி

நிற்கின்றது.

பிள்ளைத்தமிழ் இலக்கணம்

பிள்ளைத்தமிழ் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் மிகவும் விரிவானமுறையில் விளக்குகின்றன. பிள்ளைத்தமிழ் நூல் மூன்று மாதம் முதலாக இருபத்தொரு மாதம் வரையில் அமைந்த ஒற்றித்த மாதங்களாகிய பத்தினும் இடம்பெறும். இதனை,

மூன்று முதல் மூவெழு திங்களின் ஒற்றை பெற்ற முற்றுரு மதியின் கொள்ளுக பிள்ளைக் கவியைக் கூர்ந்தே

-இ.வி.பா.50

மூன்று, ஐந்து ஏழாம் ஆண்டினும் ஆகும்

என்ற இலக்கண விளக்கப் பாட்டியலால் தெளியலாம். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்ற பத்து பருவங் களும் இடம்பெறும். பிள்ளைத்தமிழில், பெண்பால் பிள்ளைத்தமிழ் ஆயின் இறுதியில் உள்ள மூன்று பருவங்களுக்கு மாறாக கழங்கு, அம்மானை, ஊசல்

என்ற மூன்று பருவங்களும் இடம் பெறும்.