பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

84 வாழ்வியல் நெறிகள்

பருவத்தை வகுத்துக் கொண்டு பத்துப் பருவங்களால பாடுவது பிள்ளைத்தமிழ் நூலாகும் எனலாம். இப் பாடல்கள் பிள்ளமைப் பருவத்தைத் தலைமையாக வைத்துப் பாடப்பட்டிருந்தாலும் ப ா ட் டு ைட த் தலைவனின் வீரச் செயல்கள், குணங்கள் முதலியன சிறப்பாகப் பேசப்பட்டிருக்கும். சான்றாக முருகனைப் பற்றிய பிள்ளைத்தமிழ் நூலில் அவன் சூரபதுமனைத் தடிந்தது, கிரெளஞ்ச மலையை அழித்தது, தெய்வ யானை, வள்ளி ஆகியோரை மணந்தது முதலிய சிறப்புச் செய்திகள் கூறப்பெற்றிருக்கும்.

பெயர் பெறும் முறை

இறைவன் (அ) இறைவன் மீது பாடப் பெற்ற பிள்ளைத்தமிழ் நூல்கள் அவர்கள் பெயராலேயே அவர்கள் எழுந்தருளி இருக்கும் தலங்களின் பெயரோடு சாத்தியோ கூறப்படுகின்றன. அழகர் பிள்ளைத்தமிழ் சேதுபர்வத வர்த்தினி பிள்ளைத்தமிழ் போன்றவை இம்முறையில் அமைந்தவை. இவ்வாறே வள்ளல்கள் மீதும் மன்னர்கள் மீதும் பாடப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல்கள் அத்தலைவர் பெயராலோ அத்தலைவரின் ஊர்ப்பெயரோடு சார்த்தியோ அழைக்கப்படுகின்றன. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், திருவாவடுதுறை பிள்ளைத்தமிழ் என்பன இம்முறையில் பெயர் பெற்றவை.

சிவபெருமானைக் குழவிப் பருவத்தில் பிள்ளைத் தமிழில் கண்டுகளிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கென்றே பரஞ்சோதியார் சிவனின் பிள்ளைப்பருவத்தைத் தம் திருவிளையாடலில் பாடியுள்ளார் போலும்! பிள்ளைத் தமிழில் சிவனைக் குழவியாகக் காண இயலாவிட்டலும்