பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! -- o o H - உாக்டரி சி. பாலசப்பிரமணியன் 85

திருவிளையாடல் புராணத்தில் இத்தகைய வாய்ப்பு மக்கு உள் ளது.

எழுதரிய மறைச்சிலம்பு கிடந்துபுறத் தலம்ப அன்பர் இதயமெனும் செழுமலர் ஓடையின் மலர்ந்து சிவானந்தர்

தேன் ததும்பும் தெய்வக் கஞ்சத் தொழுதகு சிற்றடிப் பெரியவிரல் வைத்து

மைக்கணித் ததும்ப வாய்க்கண்ணிர் விட்டு அழுதின ஆடையில் கிடந்தான் அனைத்துயிரும்

ஈன்று காத்தளிக்கும் அப்பன்

என்ற இச்செய்யுள் இறைவனாகிய சிவன் குழவியாகி அழுகின்ற காட்சியினை மாட்சியே டு உரைக்கின்றது

பிள்ளைத் தமிழில் பருவங்கள்-காப்புப் பருவம்

திருமால் முதலிய கடவுளர்களை வாழ்த்திப் பாட்டுடைத் தலைவனைக் காக்குமாறு வேண்டுவது காப்புப் பருவம். இது பிள்ளைத்தமிழ் நூல்களில் முதலாவதாக இடம்பெறும். காப்புப் பருவத்தில் முதல் கடவுளாகத் திருமாலைப் பாடவேண்டும் என்பது பாட்டியல் மரபு.திருமாலை முதற்கண் கூற வேண்டு. வதற்கு, *.

அவன்தான்

காவற்கிழவன் ஆகலானும்

பூவின் கிழத்தியைப் புணர்தலானும்

முடியும் கடகமும் மொய்ப் பூந்தாரும்

குழையும் நூலும் குருமணிப் பூணும்

அணியும் செம்மல் ஆக லானும்

முன்னுற மொழிதற்கு உரியன் என்ப

፰/ በኮ .--6