பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* كان o

. ... “. | “. * * டர்சிடரி சி. பாலசுப்பிரமணியன் 87

பருவம். குழந்தை தன்னுடைய ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி இருகைகளையும் மண்ணில் ஊன்றித் தலையை கிமிர்த்திப் பார்த்து ஆடுதல் செங் கிரை எனப்படும்.

தாலப்பருவம்

5 முதல் 7 திங்கள் வரை அமையும் பருவம் தாலப் பருவம். குழந்தை தாலாட்டைக் கேட்கும் பருவம். குழந்தையைத் தொட்டிலிலிட்டு அதன் முன்னைச் சிறப்புகளை யெல்லாம் தொகுத்துத் தாலாட்டும் பிள்ளைத்தமிழில் தாலப்பருவம், செங்கீரைப்பருவம். இரண்டும் மாறிமாறியும் அமையும். இரண்டாவதாக தாலப்பருவமும், மூன்றாவதாக சப்பாணிப்பருவமும் அமைகின்ற கிலையும் உண்டு. இதற்கு,

செப்பரிய காப்புத் தால் செங்கீரை சப்பாணி

என்று இலக்கணம் வகுக்கிறது. வெண்பாப்பாட்டியல்.

o

சப்பாணிப் பருவம்

தாலப்பருவத்தை அடுத்து வருவது சப்பானிப் பருவமாகும். இது முதல் 9 திங்கள் வரை அமையும். சங்க இலக்கியத்தில் இதைப் பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை. இப்பருவத் தில் குழந்தை கி மி ர் க் து உட்கார்ந்து இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்துக் கொட்டி முழக்கும். உட்காரும் கிலையாலே இதற்குச் சப்பாணி என்ற பெயர் வந்தது. என்பது சிலர், கொட்டும் அமைப்பிற்கே சப்பாணி என்று பெயர்

வந்தது என்பர் சிலர். எப்படியாயினும குழந்தை