பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வாழ்வியல் நெறிகள்

உட்கார்ந்து கைகொட்டி மகிழும் பருவமே சப்பாணிப் பருவம்.

முத்தப் பருவம்

சப்பாணிப் பருவத்தை அடுத்து மகிழும் பருவமே முத்தப்பருவம். சங்க இலக்கியத்தில் இதைப்பற்றிய குறிப்பு இல்லை. 9 முதல் 12 திங்கள் வரை அமையும் குழந்தையைத் துாக்கி மடியில் வைத்து அதன் எச்சில் வாயால் முத்தம் பெறும் சிறப்பினைப் பெற்றோரே அறிவர். தம் பாட்டுடைத் தலைவனை, அண்டம் கடந்த அண்ணலை, அம்மையைக் குழந்தையாக்கி அதன் முத்தத்திற்கு ஏங்கும் மெய்யடியார்தம் நிலை, அறிந்து இன்புறத்தக்க ஒன்றாகும்.

| H-H H

வாரானைப பருவம

முத்தப்பருவத்தை அடுத்து அமைவது வாரானைப் பருவம். எங்கோ அப்பாலுக்கப்பாலாய் இருக்கும் தம் பாட்டுடைத் தலைவனை அருகில் வருக வருக என வாய் குளிர மெய்மகிழ அழைக்கும் இப்பருவம் ஏற்றம் மிக்க ஒரு பருவமாகும். மதுரை மீனாட்சி அம்மன் முன்னின்று குமரகுருபரர் இவ்வகைப் பாடலுள் ஒன்றாய தொடுக்கும் கடவுள் பழம்பாடல்’ என்ற பாடலைப் பாடும்போதுதான் அம்மை குழந்தை வடிவாக வந்து அருள்புரிந்தாள் எனக் கூறுவர்.

அம்புலிப் பருவம்

வருகைப் பருவத்தைத் தொடர்ந்து வருவது

அம்புலிப் பருவமாகும். வளரும் இளம் குழந்தைக்கு

வானத்துத் திங்கள் ஒரு புரியாத புதுப்பொருளாகத்