பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டரி சி. பrகைப்பிரமணியன் §§

தான் தோன்றும். அது தோன்றும் திசைகோக்கிக் கைரீட்டும். குழந்தை அதை விளையாட அழைப்ப தாகத் தாய் எண்ணுவாள். இப்பருவத்தில்தான் கவிஞன் தன் முழுத்திறனையும் காட்ட வாய்ப்பு இருக்கின்றது. அம்புலியை ஆட அழைக்கும்போது தாய் கால்வகை உபாயங்களைக் கையாளுகின்றாள். சாம, பேத, தான, தண்டம் என அவற்றைக் காட்டுவர். இன்னின்ன வகையில் நீயும் என் செல்வனும் ஒத்திருக்கின்ற காரணத்தினால் உன்னைத் தனக்குச் சரிநிகர் சமானமாக எண்ணி விளையாட அழைப்பதை அறிந்து ஒத்தவருடன் விளையாட வா என அழைப்பது முதல்நிலை. நீயும் இவனும் இன்னின்ன வகையில் வேறுபடுகின்றிர்கள்,என்றாலும் இவன் அருள் உள்ளம் வாய்ந்தவன் ஆதலின் விளையாட அழைக்கின்றான், ஆகவே வருக என அழைப்பது இரண்டாம் நிலை. நீ இவனோடு விளையாடவரின் இன்னின்ன கலன் களைப் பெறுவாய் எனக் காட்டுவது மூன்றாவது கிலை. இ த் த ைன வகையில் வருந்தி அழைத்தும் வாராது ஒழியின் இன்னின்ன வ ைக யி ல் தண்டனை பெறுவாய் என்று ஒறுக்கும்முகத்தான் அழைப்பது கான்காம் கிலை. இவ்வாறு கால்வகை உபாயங்களால் அழைக்கும்போது ‘சிலேடை முதலிய அணி இலக்கியங்களால் அழகுற அமையப் பாடும் புலவர்தம் திறத்தினைக் காணலாம்.

இறுதியில் அமையும் மூன்று பருவங்கள்

அடுத்து வருகின்ற மூன்று பருவங்களும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகின்றன. அம்புலி அழைக்கும் வரைக்கும் ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் வேறுபாடில்லை. வளர்ச்சி அடைய