பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. திருமூலர் தெளிவுறுத்தும் வாழ்க்கை நெறி

இவ்வுலகில் காள்தோறும் எண்ணற்ற உயிர் இனங்கள் பிறக்கின்றன; இறக்கின்றன. இவ்வுலகின் நியதியே பிறப்பும் இறப்புமாய் அமைவதனைக் காணலாம். இ வி வு ல கி ல் பிறக்கும் உயிர்கள் அனைத்தும் உண்டு வாழ்ந்து இறுதியில் முடிகின்றன. பிறப்பதும் இறப்பதுமேதாம் வாழ்க்கையா என்ற வினா எழுகின்றது. தோற்றம் உண்டேல் முடிவும் உண்டு என்பதே வாழ்வின் கியதியாகும். வான வீதியில் வலம் வரும் திங்களாம் சக்திரனும் இதனை உலக மக்களுக்கு உணர்த்தி வருகிறான். மாதத்தில் பதினான்கு நாட்கள் வளர்வதும் பின் பதினான்கு நாட்கள் தேய்வதும் கிலாவின் கியதியாக அமைகிறது

தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் அறியா தோரையும் அறியக் காட்டித் திங்கள் புத்தேள் திரிதரும் உலகம்

-புறநானூறு: 27 11-14

என்று புறநானுாறு நிலவின் கியதியாகவும், ஏன்? வாழ்க்கையின் “கியதியாகவும் அமையும் ஒன்றனைப் புலப்படுத்துகின்றது. நிலையாமை ஒ ன் ற ைன