பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Aாக்டரி சி. பாலசுப்பிரமணியன் 05

வற்புறுத்தும் காலடியார் பாட்டொன்றும் இவ் வகையிலேயே அமைந்திருக்கக் காணலாம். ‘கின்றான் இருந்தான் கிடந்தான், கேள் அலறச் சென்றான்’ எனுன்ம் வகையில் கிலையாமையினை வற்புறுத்தி இருக்கக் காணலாம். தெய்வப்புலவர் திருவள்ளுவ னாரும் கேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லை என்பதே இவ்வுலகிற்குப் பெருமையாக அமைகிறது என்ற கருத்தில்,

நெருகல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு

-திருக்குறள் 336

என்ற திருக்குறளை யாத்துள்ளார். ‘கேற்றைக் கிருந்தாரை இன்றைக் கிருப்பார் என்று எண்னவோ சதமில்லை கெஞ்சே!” என்று ஆன்றோர்கள் அருளிச் சென்ற மணிமொழியினையும் ஈண்டு கோக்குக. இதனையே பலர்செலத் தான் செல்லாக் காடு வாழ்த்து’ எனப் பழமை காட்டுகிறது தொல்காப்பியம். தான் இருந்த இடத்திலேயே இருந்து மற்றவரைத் தன்பால் அழைத்துக் கொள்ளும் தகுதி இடுகாட்டிற்கும் சுடுகாட்டிற்கும் அமைந்திருப்பதனாலேயே அவற்றை “கன்காடு’ என்ற மங்கலச் சொல்லால் மங்கல வழக்கு என இலக்கணமும் இடமளித்தது. அதனையே ‘கில்லா வுலகின் நிலைமை’ என்பர்.

இந்த நிலையாமையினைத் தமிழ்ப் புலவர்கள் பலர் காலங்காலமாக வற்புறுத்தி வருகின்றனர். கிலையாமையினைத் தெரிந்து கொள்கிறபொழுதுதான் இவ்வுலகில் நிலைத்த சில செயல்களைச் செய்ய

முடியும்.