296 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் அவர்களையெல்லாம் வாழ்த்தி வரவேற்றுப் போற்றிப் புகழ்ந்து வழி அனுப்பி வைக்க நாம் அனைவரும் இங்குக் கூடியுள்ளோம். நமது கழகத்தினர் சிறிய எண்ணிக்கையில் தான் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று இருக்கிறார்கள் என்றாலும் இந்த வெற்றியானது, மக்கள் மன்றத்தினர் நம்மை மதிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. பெரும்பாலான தொகுதிகளில் நாம் வெற்றிக்கான வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்றாலும், நாடு தழுவிய வகையில் தி.மு. கழகம் நன்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் நாடெங்கணும் கழகத்தின் கொள்கை விதைகளைப் பரவலாகத் தூவி யுள்ளோம். அந்த விதைகள், எதிர்காலத்தில் முளை விட்டு, இலைவிட்டு, செடியாகி, மரமாகி, பூத்து, காய்த்து, கனிந்து நல்ல பல பலன்களைத் தரும் என்பது உறுதியாகிவிட்டது. தமிழகச் சட்டமன்றத்திலும், இந்திய நாடாளு மன்றத்திலும் நமது கொள்கைக் குரல் ஒலிக்கத் தலைப்பட்டுவிட்டது. அந்தக் குரல் நாளுக்கு நாள் ஓங்கி நிற்கும் என்பது உறுதி. இன்னும் ஐந்து ஆண்டுகளில், நமது கழகம் சட்டமன்றத் தில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும். அதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆளுங்கட்சியாக மாறும் என்பதற்கான அறிகுறிகளும் தென்படத் தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் நமது கொள்கை குறிக்கோள் - கோட்பாடு ஆகியவற்றிற்கு மக்கள் மன்றத்தில் நல்ல ஆதரவும், அரவணைப்பும் ஏற்படும் என்பது உறுதி. அறிஞர் அண்ணா அவர்களின் சீரிய தலைமையின் கீழ் நமது சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியினராக இருந்து பணிபுரிவதன் மூலம், பொதுமக்களின் அன்பும், ஆதரவும் நம்பிக்கையும், நன்மதிப்பும் கழகத்திற்கு மிகவாகக் கிடைக்கும் என்பது திண்ணம்,
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/309
தோற்றம்