தி.மு. கழகம் 343 சர்வாதிகாரப் போக்கில் நடந்துவரும் காங்கிரசை ஒழிக்க 1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாமும், தோழமைக் கட்சிகளும் மிகவும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து பாடு படவேண்டும். இன்றைய நாளில் காங்கிரசுக் கட்சி இளைத்துப் போயிருக்கிறது. அதை வீழ்த்துவதற்காக நாம் மற்றக் கட்சிகளுடன் உடன்பாடு செய்து கொள்வது தவறாகாது. நாம், நமது தோழமைக் கட்சிகளுடன் கொள்கைக் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நான் கூறவில்லை. தொகுதி உடன்பாடுகள் செய்துகொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறேன். எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்து சிதறிப்போகக் கூடாது என்பதுதான் நமது நோக்கம். தேர்தல் உடன்பாடு ஏற்பட்டாலும் சரி, ஏற்படாவிட்டாலும் சரி, நீங்கள் உங்களுடைய கடமையிலிருந்து நழுவிடக் கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள். 1962 தேர்தலில் நமக்குத்தான் அதிகப் பொறுப்பு இருக்கிறது. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. எதிரிகளின் பண பலத்தையோ, படை பலத்தையோ, சூழ்ச்சிகளையோ கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. நமது இலட்சியம் மிகத் தூய்மையானது. அது கடைசியில் வெற்றி பெற்றே தீரும்!' 1962 பொதுத்தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பாக நாடாளுமன்றத்துக்கு ஆறு தொகுதிகளிலும், தமிழகச் சட்டமன்றத்துக்கு எழுபத்திரண்டு தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் முதல் பட்டியலை, அறிஞர் அண்ணா அவர்கள் மாநாட்டில் கூடியிருந் தோர்க்குப் படித்துக் காட்டினார். மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற மாநாட்டின் மூலம் கழகத் தோழர்களும்,ஆதரவாளர்களும் புத்துணர்ச்சி
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/356
தோற்றம்