உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரிக் கல்வி 27 மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்றவைகளை நயம் படவும், நகைச்சுவைபடவும் எடுத்து விளக்குவதில் வல்லவராக விளங்கினார். டாக்டர் ஏ.சி. செட்டியார் அவர்கள் தமிழ் இலக்கிய வரலாறு, மொழிநூல்,புற நானூறு, பதிற்றுப்பத்து போன்றவற்றைப் பயிற்றுவிப்பதில் சிறந்து காணப்பட்டார். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியங்கள் ஆகியவற்றைப் பயிற்றுவித்து வந்தார். ஒளவை துரைசாமி பிள்ளை அவர்கள் அகநானூறு, குறுந் தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம் போன்றவைகளைப் பயிற்றுவித்து வந்தார். பூவராகம் பிள்ளை, கந்தசாமியார் போன்றவர்கள் தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களைத் தெள்ளத் தெளி வாகப் பயிற்றுவித்துவந்தனர். கோ. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் கம்ப இராமாயணம், சீவகசிந்தாமணி, பெருங்கதை போன்றவைகளை நயம்படப் பயிற்றுவித்து வந்தார். மு. அருணாசலம் பிள்ளை அவர்கள் பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் போன்றவற்றைப் பயிற்றுவித்து வந்தார். சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டுக் குறிப்புக்கள் பற்றியும், தமிழர் வரலாறு பற்றியும் பயிற்றுவித்து வந்தார். ண நான் பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும் ஓரளவுக் குப்பெற, என்னைப் பலவகைகளிலும் ஊக்குவித்தவர்கள், பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளை, டாக்டர் ஏ.சி. செட்டியார், ஒளவை துரைசாமி பிள்ளை ஆகியோர் ஆவர். தமிழ்ப்பட்டிமன்றம் நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கத் தொடங்கிய காலத்தில் காங்கிரசு -கம்யூனிஸ்டுக் கட்சி களிடம் பற்றுக்கொண்ட மாணவர்கள் பலராக இருந்தார்கள். திராவிட இயக்கக் கொள்கைகளிடத்தே பற்று வைத்துத் திராவிட இயக்கத் தலைவர்களையும், பெரியார்