உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.மு. கழகம் 359 மொழிவழி மாநிலப் பிரச்சினைகளும், இன வழிப் பிரச்சினைகளும் இந்தியாவின் பல பகுதிகளிலும் கொழுந்து விட்டு எரியவே செய்கின்றன. இவையெல்லாம் ஒருமைப் பாட்டுத் தன்மையைக் கொண்டன அல்ல. எனவே, இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்க எண்ணுவதைவிட, இந்தியா இனவழி நாடுகளாகப் பிரிந்து நிற்க இடந்தந்து, இந்தியத் துணைக் கண்ட நாடுகளிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்கப் பாடுபடுவதுதான் சாலச் சிறந்ததாகும்!" சேலம் பொதுக்குழுக் கூட்டம் 1962 செப்டம்பர் 29, 30ஆகிய நாட்களில், சேலத்தில், தி.மு.கழகத்தின் பொதுக்குழுக்கூட்டம், தலைவரான எனது தலைமையில் நடைபெற்றது. அவைத் அறிஞர் அண்ணா, தலைமைக் கழக நிருவாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அனைவரும் கலந்து கொண்டனர். விலைவாசி உயர்வை எதிர்த்து நடத்திய அறப்போராட் டத்தில் ஈடுபட்டுச் சிறைசென்று மீண்ட அறப்போர் வீரர்கள் அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மற்றும் கழக வளர்ச்சி, நாட்டின் பிரச்சினைகள் பற்றிய பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அறிஞர் அண்ணா அவர்கள் சீனப் போர் பற்றியும், பொதுவான அரசியல் நிலைகள் குறித்தும் விரிவாகப் பேசினார். என்னுடைய முடிவுரைக்குப் பின் பொதுக்குழுக் கூட்டம் இனிதே நிறைவு எய்தியது.