408 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் மாநாட்டில் அறிஞர் அண்ணா, நான், கலைஞர் கருணாநிதி,மதுரை முத்து, சிற்றரசு, நடராசன் போன்றோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினோம். மதுரை மாவட்ட தி.மு.கழக மாநாடு மதுரை மாவட்ட தி.மு.கழக மாநாடு, 1966 அக்டோபர் 1, 2 ஆகிய நாட்களில், வத்தலக்குண்டில் நடைபெற்றது. மதுரை முத்து வரவேற்புரை ஆற்றினார். அழகமுத்து மாநாட்டைத் தொடங்கிவைத்தார். இரத்தினவேல் பாண்டியன் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். காஞ்சி மணிமொழியார் கண்காட்சியைத் திறந்துவைத்தார். மாநாட்டில் அறிஞர் அண்ணா, நான், கலைஞர், பேராசிரியர் அன்பழகன் மற்றும் கழக முன்னணித் தலைவர்கள் சிறப்புரை நிகழ்த்தினோம். செங்கற்பட்டு மாவட்ட தி.மு.கழக மாநாடு செங்கற்பட்டு மாவட்ட தி.மு.கழக மாநாடு, 1966 அக்டோபர் 15, 16 ஆகிய நாட்களில் செங்கற்பட்டில், .அரங்கநாதன் பந்தலில், தேவராசன் அரங்கில் நடை பெற்றது. மாயவரம் கிட்டப்பா கழகக் கொடியை ஏற்றி வைத்தார். புலவர் கோவிந்தன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். கிருட்டிணமூர்த்தி மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். அறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன், மதியழகன் மாநாட்டில் 15.10.66 அன்று கலந்துகொண்டு உரையாற்றினார்கள். நானும், கலைஞர் கருணாநிதியும் 16.10.66 அன்று கலந்துகொண்டு உரை நிகழ்த்தினோம்.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/425
தோற்றம்