உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் தி.மு. கழகம் 531 நான் தி.மு.கழகத்தை விட்டு விலகியவுடன், கலைஞர் கருணாநிதி அவர்கள், "நீ கூடவா புரூட்டசு?" என்று ஷேக்ஸ்பியரின் ஜுலியஸ் சீசர் நாடகத்தில் வரும் ஒரு சொற்றொடரைப் பயன்படுத்தி, 'முரசொலி'யில் எழுதிக் காட்டினார். நான் அந்தக் கூற்றைப் பற்றிக் கவலைப்படவில்லை. நான் 'புரூட்டசு' என்றால், அவர் 'சீசர்' என்று ஆகிறார். ஷேக்ஸ் பியரின் நாடகத்தில் புரூட்டசு என்பவன், பெருமைக்குரிய வனாக - பண்பாளனாக - நேர்மையாளனாக - நாணயமானவ னாக - உண்மையானவனாக - வீரனாகத்தான் வருணிக்கப் படுகிறான். அவன் கெட்டவனாகச் சித்தரிக்கப்படவில்லை. புரூட்டசு பேசும்போது, "நான் சீசர்மேல் கொண்ட அன்பு எவரையும்விடக் குறைந்தது அல்ல, ஆனால், உரோம் நகரின்மீது நான் கொண்டிருக்கும் அன்பு, அதைவிட மிகப் பெரியதாகும்!" என்று குறிப்பிடுகிறான். அதுபோலத்தான். நானும் கூறுகிறேன், "கலைஞர் மீது நான் கொண்டிருக்கும் அன்பு குறைந்தது அல்ல; ஆனால், கழகத்தின் மீது நான் வைத்திருக்கும் அன்பு அதைவிட மிகப் பெரியது ஆகும்! என்று. புரூட்டசு சீசரைக் கொன்று உரோமைக் காப்பாற்றினான். ஆனால், இந்தப் 'புரூட்டசு' அப்படிச் செய்யமாட்டான். எனவேதான் தி.மு.கழகத்தை விட்டு வெளியேறி வந்துவிட்டான். இந்தக் கழகத்தில் தனிநபர் வழிபாடு இருக்காது. கழகத்தை முன்னிறுத்தி, நாம் அதன் பின்னணியில் நின்று பாடு படுவோமேயல்லாமல், நம்மை முன்னிறுத்திக் கழகத்தைப் பின்னணியில் வைத்துச் செயலாற்றமாட்டோம்.