மக்கள் தி.மு.கழகம் 537 தேர்தலில் அ.இ.அ.தி.மு.கழகம் 129 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.கழகம் 48 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தமிழக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தகுதி அ.இ.அ.தி.மு.கழகத்திற்கு ஏற்பட்டது. 30.6.77 அன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் தலைமையில் அ.இ.அ.தி.மு.க ஆட்சி ஏற்பட்டது. இளைஞர்களும், தாய்மார்களும், பொதுமக்களும் அந்த ஆட்சியைப் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றனர். அன்று மாலை, சென்னைக் கடற்கரைச் சீரணி அரங்கில், புதிய அமைச்சரவைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அழைப்பின் பேரில் நான் அந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, முதலமைச்சர் புரட்சித்தலைவர் அவர்களுக்கும், ஏனைய அமைச்சர் பெருமக்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக் களையும் தெரிவித்துக் கொண்டேன். புரட்சித்தலைவரின் சீரிய தலைமையின்கீழ் தமிழக அரசு புகழோடும், பெருமை யோடும், பொலிவோடும், வலிவோடும் திகழும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தேன். பொதுக்கூட்டத்தில் நான் பேசும்போது, தெரிவித்த சில கருத்துக்கள் வருமாறு: "மாநிலக் கட்சிகளுக்கு மக்களிடத்தில் சிறப்பான வரவேற்பு இருக்கிறது என்பதை இந்தப் பொதுத் தேர்தலின் முடிவுகள் தெள்ளத்தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன. அண்ணாவின் கொள்கை வழிநின்று வெற்றி பெற்றுள்ள அ.இ.அ.தி.மு.கழகம், அண்ணா அவர்கள் பின்பற்றிய அடக்கவுணர்வோடும், ஆர்வத்தோடும் கொள்கைகளைத் தழுவி நின்று செயல்பட வேண்டும். அ.இ.அ.தி.மு.கழகம்
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/558
தோற்றம்