பக்கம்:வாழ்வுப் பாதை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலுக்குள் செல்லுமுன் வாழ்வுப் பாதை கரடு முரடானது. அப்பாதையில் நெறியில் மேடுபள்ளங்கள் நிரம்பியிருக்கும். காட்டைக் கடந்தும், மலேயினைத் தாண்டியும் அப்பாதை வழியே செல்ல வேண்டியிருக்கும். அத்தனையும் கடந்து சென்ருல் முடிவில் காண்பது இன்பபுரியோ அன்றித் துன்பக் கேணியோ என்பதும் சொல்ல முடியாது. இத்தனை இன் னல்களுக்கு இடையிலேதான் மனிதன் பன்னெடுங் கால மாகத் தன் வாழ்வைக் கழித்து வருகிருன். செல்லும் வழியில் சில விடத்தே பாதைகளில் நல்ல சிமிட்டி பூசப்பட்டிருக்கின்றது. அதில் காரில் செல்லும்போது நம்மை மறந்து இன்பத்தில் ஆழ்ந்து விடுகிருேம். ஆனல் அதே வேளையில் - அந்த இன்ப ஒரையில்-அச்சிமிட்டித் தரையையே தன் வாழ்விடமாகக் கொண்டு, மண்ணே பாயலாய் விண்ணே கூரையாய் வெற்றுடலத்தோடு உறங்கும் அந்த ஏழையின் வரண்ட வாழ்வுப் பாதையைக் காணும்போது உள்ளத்தில் வேதனேதான் பிறக்கிறது. ஆம். இன்றைய நாகரிக வாழ்வுப் பாதை அப் படித்தான் சொல்லுகிறது. புரை ஒடிய புண்ணே மூடி வைத்து மேலே பட்டால் அலங்கரிப்பது போன்று, மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வாழ்வுப் பாதைதான் இருபதாம் நூற்ருண்டின் இடையில் மக்கள் வகுக்கும் பாதை. புண்ணே அறுத்து மருந்திட்டுச் செப்டம் செய்ய வேண்டும். அதற்கு உள உரமும் எதுவரினும் அஞ்சா உணர்வும் பெற்ற நல்லவர்கள் தேவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்வுப்_பாதை.pdf/5&oldid=905128" இலிருந்து மீள்விக்கப்பட்டது