பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 羅終贊 - 醬 ஸ்கரன் உணர்ச்சிவசப்படுகிறவன், கூர்ந்து தோக்கும் இயல்பினன். விசாலப்பார்வையால் உலகையும் மனிதர் களையுமே விழுங்கிக்கொண்டிருந்த, அவனது உள்ளம் சதா விழிப்புற்றிருந்தது. எனவே பார்வை மூலம் மனசில் பதிந்த ஒவ்வொன்றும் அவனில் உணர்வுச் சலனங்களையும் சிந்தனைச் சுழிப்புகளையும் உண்டாக்கி வந்தது. அவன் முரட்டுத் துணிச்சல் உடையவனுகவும் இருத்தான் அதனுல் சில சமயங்களில் உணர்ச்சி வேகத்தின் உந்துதலால் அவன் விசித்திரமான-விபரீதமான-ஆளுல், தனக்கு மிகவும் சரியானது என்று தோன்றிய-செயல்களை உடனடியாகச் செய்து முடிக்கக் கூசுவதில்லை. தனது மனித உள்ளம் துாண்டு கிற மனிதநேயமான காரியங்களே அவை ; அவற்றை அப்படி அவன் செய்வதில் தவறு எதுவுமே இருக்கமுடியாது என்து வாதிடும் இயல்பும் அவனிடம் இருந்தது. அவனுடைய இந்தப் போக்கு அவனே ஆபத்தில் மாட்டி வைத்து விடும்; அவன் நிதானமாக நடத்து கொள்ள வேண்டி பது அவசியம் என்று பாஸ்கரன நன்கு அறிந்தவர்கள் அவனுக்கு எடுத்துக் கூறத் தவறியதில்லை. அப்போதெல்லாம் அவன் வாய்விட்டு உரக்கச் சிரிப்பது வழக்கம். கண்ணுடிக் கிண்ணங்களை உராய்ந்து ஒலி எழுப்புவது: போன்ற ஒரு தொனியில் சிரிப்பது பாஸ்கரனுக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று, களங்கமற்றுக் குதித்துப் புரண்டோடும் சிற்ருேடை மாதிரி எந்நேரமும் உருண்டேன்டிச் சிதறத் தயா ராக இருந்தது அந்தச் சிரிப்பு. . தனக்குச் சரி என்று பட்ட தை வெற்றிகரமாகச் செய்து முடித்ததும் அவன் கலகலத்துச் சிரித்து மகிழ்வான், பார்க்கீற வர்களுக்கு அது சிறுபிள்ளைத்தனமாகவோ, வெறித்தன மாகவோதான் படும். அவர்கள் எண்ணத்தை அறிந்ததும் அவன் மேலும் பலமாகச் சிரித்துக் கணிப்பான், ii