பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்பே இல்லை. அவனது ரசனேயும் ஈடுபாடும் பணத் தியாக உள்ள வியாபாரிகளுக்கு என்ன புரியும் எப்படி விளங்கும் அவர் எரிந்து விழுந்தார். பில் புத்தகத்தை அவன் மூஞ்சியிலே விட்டெறியாத குறையாகத் துக்கி வீசினர்.

  • :

s o நி 斑款 go கைலாசத்தின் முகம் செத்துவிட்டது. இதர சிப்பந்திகள் முன் தான் அவமானப்பட தேர்ந்ததுகூடப் பெரிசாகப்பட வில்ஃப் அவனுக்கு அந்தச் சுந்தரிகின் முன்னே கடைக்காரர் இப்படிப் பண்ணிவிட்டாரே என்ற கொதிப்புதான் அதிக ாேயிற்று ஒரு கலைஞனின், இலக்கியவாதியின் துண் உணர்வு களைக் கெளரவிக்கத் தெரியாதி-ஏற்று மதிக்க அறியாத-மடச் சாம்பிராணிகள் மத்திவில் தான் இருந்து பணிபுரிய வந்ததே பெரும் தவறு என்று அவன் உள்ளம் குமுறியது. - கேவலம் சில்லறை விஷயம் : அல்பக் காசுகளே இப்படிப் பெரிது பண்ணி, என்னே அவமதித்து விட்டீரே ! உம்மி கடைக் கும் எனக்கும் ஒத்துவராது" என்று சொல்லிக் கும்பிடுபோட்டு விட்டு, சிங்காரியை ஸ்டைலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, மார்பை நிமிர்த்தி தலையை உயர்த்திக்கொண்டு வெளியேறி குன் கைலாசம், அதுநாள் வரை வேலைபார்த்ததற்கு உரிய சம்பளத்தைக் கணக்குப் பண்ணி வாங்கிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு எழவேயில்லே - - 'ஏன்தான் இந்த மனுஷங்க பணத்துக்கு இப்படிப் பற வாப் பறக்கிருங்க என்பது எனக்குப் புரியவே மாட்டேன்குது: என்று அவனது கலை-கற்பனை-படைப்பு உள்ளம் குறைபட்டுக் கொண்டது. தனது தன்மைகளை உணரத் தவறி விடுகிறவர் களே வெகுவாகக் கண்டித்துக் குறைகூறித்திரியலாளுன் அவன். நண்பன் நடராஜன் வேறு தன்மைகள் கொண்டிருந்தான். சத சிகரெட் பிடிப்பது, வெற்றிலே போடுவது, நினைத்த போதெல்லாம் ருசிகரமாக டிபன் சாப்பிடுவது, அடிக்கடி சினிமாப் பார்ப்பது என்று பொழுதுபோக்கிவந்தான் அவன். புதிது புதிதாக வருகிற திரைப்படங்களேத் தவருது பார்த்துவிடும் அவன் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு நடிகை மீது மோகம் கொள்வது வழக்கமாக இருந்தது. அவளது அழகு, சிரிப்பு, வசீகரத் தன்மைகள் பற்றி நண்பர்களிடம் கதைப்பது அவனுக்கு மகிழ்வு தரும். போன மாதம் ஆகா, ஓகோ என்று புகழ்ந்து மெச்சிய நடிகையை இந்த மாதமும் அவன் பாராட்டி வியப்பான் என்று எதிர்பார்க்க முடியாது. அதே நடிகை நடித்த புதுப்படம் அவனுக்குத் திருப்தி அளிக் காமல்போவதும், அவன் அவளைக் குறைகூறி மட்டமாகப் பேசுவதும் சகஜமாகிவிடும். வேருெரு நடிகை பேரில் அவன் j9.