பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தித்துப் பேசுவது, இப்படி உங்ககூட நடந்து வருவது இன்த் எல்லாம் நிறுத்தி விடுவேன்' என்று எச்சரித்தாள். இதில் உறுதியாகவும் கண்டிப்பாகவும் இருந்தாள், * அவள் போக்கு அவனுக்கு எரிச்சலும் ஏமாற்றமும் அளித்த போதிலும், அவள் விதித்த விதிகளே ஏற்று அனுஷ்டிக்க அவன். மறுக்கவில்லை. அவனது சுயநல-சுய லாப நோக்கு, காத்திருப் பதளுல் நஷ்டம் ஒன்றும் இல்லை. இவனே விரோதித்துக் கொண்டால் காரியம் கெட்டுப்போகும்’ என்று அவனுக்கு அறி வுறுத்திக் கொண்டேயிருந்தது. பாஸ்கரனும், அவனுடைய நண்பர்களைப்போல பொது வாக, சமூகத்தில் நல்ல நிலையில் வாழ்கிற பலரையும் போலஇனியபெண் ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொண்டு வாழ்க் கையை அனுபவிக்கவே ஆசைப்பட்டான். பெரியவர்களின் போக்கு அவனுக்கு ஆதரவு தருவதாயில்லே. 'உருப்படாத பயல், வளையாக்கண்ணி, ஹேலே எதுவும் பார்க்கத் துப்பில்லாதவன், இவனே நம்பி யார் பெண்ணைக் கொடுப்பது ஆவுளை வைத்துக் காப்பாற்ற இவனுக்கு வக்கு என்ன இருக்கு? என்றெல்லாம் அவனது, உறவுக்காரர்கள் குறைகூறிப் பழித்தார்கள். பெண்ணைப் பெற்றவர்கள் அவனேக் கல்யாணத்துக்குத் தகுதியான ஒரு நபராக அங்கீகரிக்க 鹉恶 தாாகள. - * - - அந்நிலையில்தான் வசந்தாவின் பார்வையும் மனசும் அவன் பக்கம் ஊசலிட்டன. அவற்றைப் பற்றி இழுத்து, தன் பக்கமே பதிவாக இருத்திக் கொள்வதற்குத் தேவையான உத்திகள்-செயல்கள் அனேத்தையும் பாஸ்கரன் துணிந்தும். திட்டமிட்டும் செயலாற்றினுன். ஆசையைக் கொட்டி, அவள் ஆசையைக் கிளறிவிடும் கடிதங்கள் எழுதினன். அவள் வீட்டை விட்டு வெளியே கிளம்பு வதற்காகக் காத்திருத்து, வழியில் சந்தித்து, நட்பையும் உறவையும் பலப்படுத்திக் கொண்டான். உங்களைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன்' என்று அவள் வாக்குறுதி அளிக்கும் அளவுக்கு அவர்கள் உறவு வலுப்பெற்றிருந்தது. அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யமுயன்ற பெற்ருே ரிடம் அவள் தன் எண்ணத்தை வெளியிட்டாள். அவர்கள் எதிர்த்தார்கள். அவனைக் குறைகூறிஞர்கள். * . . . அவள் அசையவில்லை. 'கல்யாணம் செய்து கொண்டால், பாஸ்கர அத்தானையே கல்யாணம் செய்துகொள்வேன். இல்லாவிட்டல் எனக்குக் கல்யாணமே வேண்டாம் என்று ஒரே அடியாகச் சொல்லிவிட்டாள். - 爱器