பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரையில் படுத்து, குமுறிக் குமுறி அழுதாள். அழுதுகொண்டே கிடத்தாள். செந்தாவுக்கு வேலே கிடைத்து விட்டது. ஒரு கம்பெனி வில் டைப்பிஸ்ட் வேலை. மாதம் இருநூறு ரூபாய் சம்பளம். இதில் வசந்தாவுக்கு ரொம் மகிழ்ச்சி. அவனவிட அதிக சந்தோஷம் பாஸ்கரனுக்கு. - இதைக் கொண்டாடணும். நீயும் நானும் ஒட்டலுக்குப் பேசவோம், அப்புறம் சினிமாவுக்கு. சரிதானே? என்ருன் அவன். - ஒட்டலுக்குப் போய் ஸ்வீட்டும் காரமும் சாப்பிடுவோம். சினிமாவுக்குப் போவதெல்லாம் இப்போ வேண்டாம். கல்யா ணத்துக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று அவன் மறுத்துவிட்டாள். பாஸ்கரனுக்கு வருத்தம்தான். என்ருலும் வெனியே காட்டிக் கொள்ளவில்லை. - - அன்றிலிருந்து, கல்யாணம் சீக்கிரம் நிகழ்ந்துவிட வேண் டும் என்று அவன் ஆசைப்பட்டான். ஆதற்காக அவ:ணேத் துரண்டி வந்தான். நேரம் கிடைத்தபோதெல்லாம் அவளைச் சுற்றி வளையமிட்டான். இனிக்கப் பேசியும், ஆசைகளைக் கிளறியும், அவள் மனசை இளகச் செய்தான். உனக்கும் மாதச் சம்பளம் வருது. எனக்கும் தாராளமாகவே பணம் கிடைத்துக்கொண்டிருக்கு. நாம் இரண்டுபேரும் சேர்ந்து சந்தோஷமாக வாழமுடியும். அப்படியிருக்கையிலே காலத்தை வீணுக்குவானேன்? என்ருன். . அவளுக்கும் அது சரி என்றே பட்டது. பெற்ருே.ரிடம் சொல்லி, நடக்கவேண்டியதற்கு ஏற்பாடு பண்ணச் செய்தான். உரிய முறைப்படிகல்யாணம் நடைபெற்றது. பாஸ்கரனும் வசந்தாவும் ஒரு சிறு வீட்டில் தனிக்குடித்தனம் நடத்த லாஞர்கள். . . . . . ஆரம்பமாதங்கள் வெகு இனிமையாக, மனேகரமாக, ஓடின. உல்லாசங்களுக்குக் குன்றவில்லை. 33.