பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டு வத்துக்குருந்தி, இதை, ಜಿಜ್ಞೆ, பத்தாயி சத்துக்கு விலே போகும், கடன் ஆருயிரம் ரூபாய்க்கு இருக்கும். நீதியை வைத்து ஏதாவது பிசினஸ் பண்ணுங்க. சிறு விளிகைக் கடை நடத்தலாம். அல்லது...' - மகனின் ஆலோசனை தந்தையை வெறிகொள்ளச் செய்தது. போடா சவத்துப் பயலுக்குப் பொறந்த பயலே புத்தி போத போக்கைப் பாரு, கல்கத்தாப் பிள்ளைவாள். பரம்பரையிலே இப்படி ஒரு அல்பப் பயல் வந்து பொறப்பான்னு நான் எண்ணவெ இல்லே என் முன்னே நிக்காதே. வெளியே போ, நீ இனி என் மூஞ்சியிலே முழிக்கப்படாது' என்று காட்டுக் கூப்பாடு போட்டார். அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிளுர், > - -- அவர் உடல் பூராவும் படபடத்தது. கண்கள் சிவப்பேறிக் கனன்றன. முருகா, அப்பனே! எல்லாம் உனக்கே நல்லா இருந்தால் சரிதான் என்று முனகியவாறு திண்ணையில் படுத் திார், கண்களை மூடிக்கொண்டார். (தாமரை- 970)