பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 'எனக்கு ஒரு வேலே வேண்டும். திட்டமான மாத வருமானத் துக்கு வகை செய்கிற கெளரவமான ஒரு வேலே. அது எங்கே இருந்தாலும் பரவாயில்லை. தனியார் நிறுவனமா, பொதுப் பணித் துறையா, அரசின் சிறப்பு வாரியம் எதிலாவதா என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கவில்லை. எனது கவலே எல் லாம்-எனக்கு ஒரு வேலை நல்ல சம்பளத்தில் உடனடியாக ஒரு வேலே !’ - சபாபதி தன் எண்ணத்தைத் திடமாக அறிவித்தான். பாஸ் கரன், கணேசன், கைலாசம், நடராஜன் என்று ஒரு இனப் பறவை'களாகக் கூடியிருந்தபோது தான் செர்ன்மூன். 'உமக்கு மட்டும்தான் வேலை உடனடியாக வேணு மாக்கும்? எனக்கும், இவனுக்கும், இன்னும் எத்தனையோ பேருக்கும் வேலை கட்டாயம் கிடைத்திர்க வேண்டும் என்ற நிலைம்ைதான்’ என்று நடராஜன், கைலாசத்தையும் சுட்டிக் காட்டிப் பேசிஞன். "என்னைப் பொறுத்தவரை வேலை என்பது முக்கியமான விஷயமாகத் தோணலே. எம். ஏ. ஐ. கம்ப்ளீட் பண்ணிவிட்டு, பிஎச்டிக்கு ட்ரை பண்ணலாம்னு இருக்கிறேன். ஆராய்ச்சி பண்ணி, தீஸில் தயாரிக்கிறதிலே மூணு வருஷம் போயிடும், அதுக்கப்புறம் அல்லவா வேலையைப் பற்றி யோசிக்கணும்! " என்று கணேசன் தெரிவித்தான், வேலே இல்லாமல் சும்மா இருக்கிறவனுக்கு வீட்டிலும் உரிய கவனிப்புக் கிடைப்பதில்லை. வெளி இடங்களிலும் மதிப்பு இல்லை. அவனை யாருமே மதிப்பது கிடையாது. மேலும், வேலை என்று ஒன்று இருந்து, சம்பளம் என்று ஒரு தோகை மாதாமாதம் வந்து கொண்டிருந்தால், அதன் மெனசே தனி, அப்போ நாம் இப்படி டல்லடிச்சுப்போய் இருக்கமாட்டோம், காத் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கமாட்டோம். zy 穿