பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இந்தப் பக்கம் *100

மென்றுதான் முயல்கிறது, நம் மாநில அரசு| இல்லாவிட்டால் 1978 லிருந்து அடிக்கடி ஒர் ஊராட்சி ஒன்றியத்துக்குப் பத்தாயிரம் பன்னிரண்டாயிரம் என்று ஒவ்வோர் அச்சகத்துக்கும் வேலை கொடுத்து (சிறு தொழில் வளர்ச்சிக்கும் உதவி) வாக்காளர் பட்டியல் அச்சிட வேண்டுமென்ற அவசியமில்லை. 'எதிர் பாருங்கள்..... அதி விரைவில் பஞ்சாயத்துத் தேர்தல் வரப் போகிறது என்று அவ்வப்போது விளம்பரம் செய்ய ஒர் அமைச்சர் இருக்கவேண்டிய அவசியமில்லை.

டாக்டர் அறம் மிகவும் அவசரப்படுகிறார்..... ئےygif அதற்கு நேரம் காலம் வரவேண்டாமா? எல்லாம் விதிப்படிதானே நடக்கும்?

சில தினங்களுக்கு முன்பு இராசேந்திரசோழன் விழாவில் அமைச்சர் ஒருவர் 'இராசேந்திரச் சோழன் மட்டும் இப்போது இருந்தால் ஈழத்தில் தமிழ்ப் பெண்கள் படும் அவதியைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான்' என்று பேசியதைப் பத்திரிகையில் படித்துவிட்டு அரசியல்வாதியான என் நண்பர் ஒருவர் 'இராசேந்திர சோழனின் முன்னோர்களும் சரி, அவனும் சரி பஞ்சாயத்துத் தேர்தல்களை ஒழுங்காக நடத்தியிருக் கிறார்கள் என்பதற்குக் கல்வெட்டுக்களில் ஆதாரங்கள் உள்ளன; அவன் வந்தால் இப்படிப் பஞ்சாயத்துத் தேர்தல்களை ஒத்திவைத்துக் கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டான்' என்று கேலி செய்தார். 'இராசேந்திரசோழன் விழாவில் ஏதோ இரண்டு வார்த்தை புகழ்ந்து பேச வேண்டும்ே என்று அமைச்சர் பேசியிருக்கிறார். அதற்காக அவன் நேருக்கு நேர் அமைச்சரைப் பார்த்து ஏன் பஞ்ச்ாயத்துத் தேர்தலை நடத்தவில்லை என்று கேட்கமுடியுமா? கேட்டால் 'நீ சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தலை நடத்திய