பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா * 101

லட்சணம் தெரியாதா?’ என்று நம் அமைச்சர் திருப்பினால் என்ன செய்வான் அந்தச் சோழராசன்' என்றேன் நான். நண்பர் வேகமாய் நடையைக் கட்டினார்.

'லட்ச ரூபாய் செலவு செய்தவன் தோற்கிறான். லட்சத்தோரு ரூபாய்செலவு செய்தவன் ஜெயிக்கிறான். இதுதான் தேர்தல், வெங்காயம்' என்று பெரியார் சொன்னார். -

அண்மையில் மதுரையில் நடைபெற்ற அவருடைய கழக மாநாட்டில், கல்லூரி வளாகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகக் கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலை ஒரு ஐந்து ஆண்டுகளுக்குத் தள்ளிப் போடலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. "கட்டைப் பிரம்மச்சாரிக்கு மற்றவர்களின்கல்யாண வாழ்க்கை பற்றிக் கருத்துச்சொல்ல என்ன தகுதி இருக்கிறது? தேர்தலையே தீண்டாத தி.க.வுக்கு தேர்தல்ைப் பற்றிப் பேச என்ன யோக்கிதை இருக்கிறது?’ என்று மாணவர்கள் சீறக்கூடும்.

எனினும் சாதி, மத வட்டார வெறிகளும் கட்சிபலமும் பணபலமும் கல்லூரி வளாகத்தை யானை புகுந்த வயலாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஒன்று செய்யலாம்... ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தல் இல்லை என்று சொல்லாமல், பஞ்சாயத்துத் தேர்தலை நடத்தும் நிர்வாகத்திடம் - உள்ளாட்சித் துறையிடம் மாணவர் பேரவைத் தேர்தலையும் ஒப்படைத்துவிடலாம். சேர்த்தல் நீக்கல் என்று வாக்காளர் பட்டியல் அச்சிடுவது, எந்தெந்த வகுப்பை எந்தெந்த வேட்பாளருக்கு ஒதுக்குவது என்று தீர்மானிப்பது என்று தேர்தல் பணிகள் நடப்பதாக அவர்கள் நாட்களைக் கடத்தி விடுவார்கள். ஐந்து