பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

u8;rm * I03

க்ாரணம் வாக்குச் சீட்டு இலவசமாக வழங்கப்படுவது தான்... லாட்டரிச் சீட்டுப்போல விலை கொடுத்து வாங்கினால்தான் வாக்குச் சீட்டின் மதிப்புத் தெரியும்.

என்னைக் கேட்டால் வாக்குச் சீட்டையே கூட பரிசுச் சீட்டாக்கலாம் என்று ஒரு யோசனை சொல்வேன். வாக்காளர் ஒவ்வொருவரும் 5 ரூபாய் கொடுத்து வாக்களிக்க வேண்டியது. குலுக்கலில் ஏதாவது ஒரு எண்ணுக்குப் பரிசளிப்பது என்று அறிவித்தால் வாக்குப் பதிவும் நூறு சதம் நடக்கும்.

இளங்கவிஞர் எல்.கே.போஸ் அவர்களுக்கு இன்னொரு வார்த்தை... வாக்குச் சாவடியில் வரிசையில் நிற்பதை ஏன் அடிமைச்சாசனத்தைப் புதுப்பித்துக் கொள்ள நிற்பதாய் நினைக்க வேண்டும்...? அரிசிக்கு வரிசை, அடுப்பெரிக்கும் மண்ணெண்ணெய்க்கு வரிசை, பாம் ஆயிலுக்கு வரிசை, பாலுக்கு வரிசை, சீனிக்கு வரிசை, சினிமாவுக்கு வரிசை என்று எப்போதும் வரிசையில் நிற்கும் உரிமைச் சாசனத்தை வாங்குவதற்காக வாக்குச் சாவடியில் நிற்பதாக ஏன் நினைக்கக் கூடாது?

மற்ற ஊர்களில் எப்படியோ! எங்கள் ஊரில் இப்போதே தேர்தல் களை கட்டிவிட்ட்து. அதற்குக் காரணம், பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் நிற்பார் என்ற பத்திரிகைகளின் ஊகம்தான்.

அவர் நிற்பதாக மட்டும் நிச்சயமான அறிவிப்பு வரட்டும். அதற்குப்பிறகு பாருங்கள் எங்கள் ஊரை...!

குடியானவர்களின் கன்னங்கள் போல் குண்டுங்குழியுமாய்க் கிடக்கும் தெருக்கள், நாலிலே ஒன்றிரண்டு மட்டும் எரியும் தெரு விளக்குகள், எந்த வினாடியிலும் விழக் காத்திருக்கும் இடிபட்ட் பள்ளிச்