பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வு அருமையான முரண்கவிதை. அடிப்படையில் அரசியல் அமைப்பை மாற்றாமல் மேம்போக்காக வகுக்கப்படும் முன்னேற்றத் திட்டங்களுக்கு நேரும் 'எதிர் விளைவு விபத்தை' உணர்வோடு விவரிக்கிறது. சாக்கடை, மலம் அள்ளுதல் போன்ற அருவருப்பான தொழில்களை இன்னும் மனிதன் செய்யும் இருபதாம் நூற்றாண்டின் வெட்கக்கேட்டை எண்ணி அழுகிறது இவரது கவிதை நெஞ்சம். இத்தொழிலாளரை அருவருக்கும் அதே வேளையில் அவர்க்குத்தரும் சலுகைகளை மட்டும் எனக்கும் தா என்று கேட்கும் நம் அசிங்கங்களைப் பேனா முனையால் தோலுரித்துக் காட்டுகிறார். நெஞ்சை நெருடும் கட்டுரை.

தெருவில் அழிம்பு செய்யும் மூன்று குரங்குகள் கவிஞர் பார்வையில் 'சட்டத்தை' விட்டுக்கழற்றிக்கொண்டு வந்து விட்டு (காந்தீய) நீதிகளாகத் தெரிகின்றன. அவற்றின் பிறப்பியலை ஆராய்வதுபோல் நம் மனிதர்களையும் அரசியல்வாதிகளையும் ஒருபிடி பிடித்துவிடுகிறார். குரங்குப் பிடிதோற்றுவிடும். குரங்குத் தொல்லைபோக்க அலுவலகங்களை நாடி அடைந்த அனுபவங்கள் கிஷன் சந்தரின் “நாவல் மரம்” சிறுகதைபோல் சுவையாகவும் சுருக்கென்றும் உரைக்கப்பட்டுள்ளன. நகைச்சுவைக் கெல்லாம் முத்தாய்ப்பு, நகராட்சித் தேர்தல் நடந்து(!) முடிந்தவுடன் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லப்படும் பதில்தான்.

இப்படி எல்லாக் கட்டுரைகளுமே ஒவ்வொரு வகையில் சிறந்து விளங்குகின்றன. இறுதிக் கட்டுரை தேர்தல் பற்றிய ஒரு நடைச்சித்திரம். "வாக்குச் சீட்டுக்கும் பரிசுச் சீட்டுப்போல் விலை வைக்கவேண்டும். அப்போதுதான் அதன் மதிப்புத் தெரியும்” எவ்வளவு உருப்படியான யோசனை!

亡于

10