பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீராவின் உரைநடையில் இடையில் ஒரு பக்கத்தை மட்டும் கிழித்துவந்து காட்டினாலும் அவர் எழுத்துத்தான் என்று அடையாளம் கண்டுவிடலாம். ஒரே தொனியில் அவர் உரையாற்றுவதில்லை. உரையாடுகிறார். ஒரு கருத்துக்கும் அடுத்ததற்கும் இடைவெளியில் நமக்குச் சுவைக்க, சிந்திக்க (பேசவும்கூட) அவகாசம் தருகிறார்.

வில்லியம் எச்.காஸ் இப்போது மேற்கில் புகழ்பெற்று வரும் பெரிய கவிஞர். 'நம் எழுத்து நடை இனி எப்படியிருக்கவேண்டும் தெரியுமா?"எனக் கேட்டுவிட்டு எழுதுகிறார்.

'நம் இன்றைய உலகின் மொழியே நமக்குத் தேவை. செல்வச் செழிப்பில் உயர்குடியிற் பிறந்த பெயர்ச்சொற்கள் ஒழுக்கம் கெட்ட வினைச் சொற்களைக் கூடிக் கும்மாளமிட்டு உள்ளம் ஒத்து நிறைவுடன் வாழ்வதான ஒரு ஜனநாயக நடை அது... புதுவித அமைதியும் பொதுவகை இடியும் மோதிக்கொண்டு (பிறக்கும்). நம் தொனி நம் காலத்தோடு இசைவதாய் அமையவேண்டும். அது நம்மைப்போலவே இளமையும் வேகமும், இனிமையும், அபாயமும் கொண்டு விளங்கவேண்டும். உருவகங்கள் அதன் கடவுளாகவும், கடவுள்கள் உருவகங்களாகவும் வேண்டும். ஒரு பாடலின் கோழைத்தனம் அதற்கு கூடாது, ஆனால் கண்களும் கூடக் கேட்கும் வகையில் அது தன் இயல்பைச் சரியாய், உரக்க இசைக்கவேண்டும். நமக்குத் தேவை நம்மிடமுள்ள தளர்ந்துபோன, சிறுநீர் கழிப்பதுபோன்ற உரைநடை அல்ல, மானுடக் கலைத் தேவதையாம் கவிதை...'

காஸ் எதிர்பார்ப்பதற்கும் மேலாகவே சிறப்பாக எழுதுகிறார் மீரா. இந்த சிவகங்கைக்காரரின் உரைநடை கங்கையாய்ப் பெருகிப் பூமிக் குளிர ஓடுகிறது. அதற்கு ஒத்துக் கவித்துவமிக்க உயர்ந்த குறிக்கோள்கள் ஆகாய

11