பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இந்தப் பக்கம்* 22

'எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பாரதி பாடினார்... மகாபாரதத்தில் ஒரு மன்னர் சூதாடினான் என்றால் நம் நவபாரதத்தில் ஒவ்வொரு மன்னனும் சூதாடும் ஒரு புதுயுகம் - கிருதயுகம் - கிளர்ந்தெழுந்து விட்டது.

அன்று தருமனோடு சகுனி சூதாடினான் என்றால் இன்று மக்களோடு சகல மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு சூதாடுகின்றன, பரிசுச்சீட்டு' என்னும் நவநாகரிகப் பெயரில், ஒரு லட்சம், பத்து லட்சம் போன்ற அற்பத் தொகைகளை உதறி விட்டு ஒரு கோடி, இரண்டு கோடி என்று கவர்ச்சியாகப்பரிசை உயர்த்தி, வா இந்தப் பக்கம் என்று ஒவ்வொரு மாநிலமும் அழைக்கிறது.

ஒரு காலத்தில் நெடுஞ்சேரலாதன், நெடுஞ்செழியன், செங்குட்டுவன் போன்ற தமிழ் அரசர்கள் வடக்கே படையெடுத்து வாகை சூடினார்கள் அல்லவா?

பதிலுக்குப் பழி தீர்த்துக்கொள்ளும் வகையில் ராஜஸ்தான், உ.பி., ஒரிசா போன்ற வட மாநிலங்கள் தமிழகத்தை வளைத்துப் பிடிக்கின்றன.

லாட்டரி ஏஜெண்டுகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்துவிட்டது. ஒரு குபேர ஏஜெண்டுக்குக் கீழே எத்தனையோ குட்டி ஏஜெண்டுகள், குண்டுசியில் குத்திய சின்னச்சின்னக் கொடி களைப் போல் சீட்டுகளை தூக்கிப் பேருந்துநிலையம், ரயில் நிலையம் என்று மக்கள்கூடும் இடங்களில் எல்லாம் திரியும் சிறுவர்கள்... இவர்கள் நினைத்தால் ஒருகட்சியே தொடங்கலாம். ஆட்சியைப் பிடிக்கலாம். கோடிகோடியாய் பரிசுச் சீட்டுகளை வாரிவழங்கும் இந்த வள்ளல்களுக்கு வாக்குச் சீட்டுகள்

குவியாதா என்ன?