பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 29

தொடங்கலாம் போலிருக்கிறது) என்று எழுதிக்கொடுத்து ஒரு நூறுவெண் பொற்காசுகளாவது பெறலாமல்லவா?

மறந்து விட்டேன் பார்த்தீர்களா..?

படிக்காசுப் புலவர் இப்போது வந்தால் படத்துக்குப் பாட்டெழுதி ஆயிரம் இரண்டாயிரம் என்று சம்பாதிக் கலாம்... கவிஞர் கண்ணதாசனின் இடம் காலியாக இருக்கிறதே!

தம்பி வைரமுத்து படிக்காசு வருவதைப் பற்றி வருத்தப்பட மாட்டார். நீங்கள் எல்லாம் படத்துறைக்கு வர வேண்டும் என்று மூத்த கவிஞர்களைப் பார்க்கும் போதெல்லாம் முகமலர்ச்சியோடு சொல்லக்கூடியவர். சீனியருக்கும் சீனியரான படிக்காசு வந்தால் விடுவாரா?

கவிஞர் மு.மேத்தா தலைமையில் புதிதாய்த் தொடங்கப் பெற்றுள்ள தமிழகக் கவிஞர் பேரவை ஒவ்வொரு வருடமும் சிறந்த கவிதைத் தொகுதிக்கு 5000 தரப் போகிறதாம்.

கார் தட்டிய பஞ்சகாலத்தைப் பற்றிய தம் தனிப்பாடல்களைத் தொகுத்து முப்பது நாற்பது பக்கத்துக்கு வாசகர்களின் முன்னுரை பின்னுரையோடு வெளியிட்டுப் பரிசைத் தட்டிக்கொண்டு போகலாமே! (பெரிய மனது வைத்து மேத்தா இந்தப் போட்டியில் பங்கு கொள்ளக் கூடாது என்பது நம் வேண்டுகோள்)

படிக்காசுக்கு என் கைவசமிருக்கும் கடைசி யோசனை. கவிதைக்காக ஒரு தனிப்பயிற்சிக் கல்லூரி நடத்தலாம். பத்திரிகைகளுக்கு கவிதைகள் அனுப்பி அவை வெளிவராமல் தோல்வியடைந்த மாணவனைப் போல் சோர்ந்து போயிருக்கும் கவிஞர்கள் இங்கே ஏராளம்.