பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 31 'மெளனத்தின் பூமியைப் பெருமூச்சுகளால் கீறி துக்க விதைகளை இட்டு உயிர் நிரம்பிய தாகங்களை ஊற்றிக் கவிதைகளை வளர்ப்பேன்"

என்பது போன்ற அபியின் 'மெளனத்தின் நாவுகள் கவிதைகளைப் பதிவு செய்து கட்டபொம்மன், மனோகரா வசனம்போல் தெருவில் போவோர் வருவோர் செவிப்படலம் கிழிய ஒலிபரப்பக்கூடும்.

மக்கள் பெருக்கம் வரவர அதிகரிப்பதால் கடற்கரைக்குப் போனால் இனிமேல் காற்று வாங்க முடியும் என்ற உத்தரவாதம் இல்லை. ஆனால் கவிதை வாங்க முடியும்!

ஒவ்வொரு சிலைக்கு அடியிலும் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை அரங்கேற்றும் போது சூடு தணியாமல் அவற்றை விலை கொடுத்து வாங்கலாம். சுவைக்கலாம். 'கவிதை வாங்கப் போனேன் - கொஞ்சம் காற்றுவாங்கி வந்தேன்' என்றுபாடும் காலம் வரத்தான் போகிறது. மொத்தத்தில் கவிதை தன்னிச்சையாகப் பெருக்கெடுக்கும் ஊற்று என்பது போய் அது செயற்கை மழை என்ற நிலைக்கு வந்துவிட்டது. அது Art - கலை என்பதிலிருந்து Craft ஒருவகைக் கைத்தொழில் என்று சொல்லும்படி மாறிக் கொண்டிருக்கிறது.

இங்கே ஜாதகம் கணித்துக் கொடுக்கப்படும். சோதிடம் பார்க்கப்படும்’ என்பது போல இங்கே தீபாவளி பொங்கல் பண்டிகைக் கவிதைகள், மந்திரிகளுக்கு வரவேற்புக் கவிதைகள், திருமணம், காதுகுத்து போன்ற வைபவக் கவிதைகள் கிடைக்கும் என்று வருங்காலத்தில் கவிதைக் கடைகள் திறக்கப்படலாம்.